பொது செய்தி

இந்தியா

அதிகரிக்கும் கொரோனா; பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்

Updated : மே 08, 2021 | Added : மே 08, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இதனை அடுத்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு மாநில அரசுகளால் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும் மே 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை அத்தியாவசிய அங்காடிகள் தவிர மற்ற அனைத்து கடைகளையும் மூடி முழு ஊரடங்குக்கு உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்திற்கு முன்னதாக, கர்நாடகா,
MoreStates, Lockdown, India, CovidCrisis, Situation, Worsens, ஊரடங்கு, மாநிலங்கள், இந்தியா, கொரோனா, அச்சுறுத்தல்

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இதனை அடுத்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு மாநில அரசுகளால் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும் மே 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை அத்தியாவசிய அங்காடிகள் தவிர மற்ற அனைத்து கடைகளையும் மூடி முழு ஊரடங்குக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்திற்கு முன்னதாக, கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான், பீகார், உள்ளிட்ட பல மாநிலங்களில் தற்போது முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. கர்நாடகாவைத் தொடர்ந்து தமிழகம் 14 நாட்கள் நீண்ட ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

டில்லி, மஹாராஷ்டிரா உள்ளிட்ட வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஊரடங்கு கட்டாயமாக கடைபிடிக்கப்பட்டது.


latest tamil news


தற்போது தினசரி வைரஸ் தாக்கம் ஏற்பட்டவர்களது எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. வரும் வெள்ளிக்கிழமை, ஊரடங்கு குறித்து மாவட்ட ஆட்சியர்கள் உடன் முக்கிய கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.


latest tamil news


தமிழகத்தைப் போலவே ராஜஸ்தானிலும் வரும் மே 10-ம் தேதி முதல் 14 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த மே 31 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறிய விழாக்களில் பதினோரு பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கேரளாவில் முதல்வர் பினராய் விஜயன் ஒன்பது நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தி உள்ளார். இந்த ஊரடங்கு மே 16ம் தேதி வரை நீடிக்கிறது.

பீகார் மாநிலத்தில் கடந்த மே 5ம் தேதி துவங்கி 11 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மத வழிபாட்டு தலங்கள், பள்ளி, கல்லூரிகள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த ஊரடங்கு இந்த மாத இறுதிக்குள் பலனளிக்கும் என்று மேற்கண்ட மாநிலங்கள் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-மே-202104:35:02 IST Report Abuse
ஆப்பு ஒரே நேஷன்... ஒரே கொரோனா. . சீரான வளர்ச்சி... வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X