பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் 16.73 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி

Updated : மே 08, 2021 | Added : மே 08, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள மொத்த கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 16.73 கோடியாக அதிகரித்துள்ளது.இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையில் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், சர்வதேச நாடுகள் மருத்துவ உதவிகளை அளித்து வருகின்றன. அவற்றை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் முறையாக ஒதுக்கப்படுவதை மத்திய அரசு உறுதி

புதுடில்லி: இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள மொத்த கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 16.73 கோடியாக அதிகரித்துள்ளது.



latest tamil news




இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையில் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், சர்வதேச நாடுகள் மருத்துவ உதவிகளை அளித்து வருகின்றன. அவற்றை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் முறையாக ஒதுக்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்து வருகிறது.

அந்த வகையில் இதுவரை 2,933 பிராணவாயு செறிவூட்டிகள், 2,429 பிராணவாயு சிலிண்டர்கள், 13 பிராணவாயு உற்பத்தி கருவிகள், 2,951 செயற்கை சுவாசக் கருவிகள் மற்றும் சுமார் 3 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் வினியோகிக்கப்பட்டுள்ளன.


latest tamil news




இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 16.73 கோடியை இன்று கடந்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 18 - 44 வயதில் 14,88,528 பயனாளிகளுக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை 7:00 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட அறிக்கையின்படி 24,37,299 முகாம்களில் 16,73,46,544 தடுப்பூசிகள் நாடுமுழுவதும் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 23 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X