அரசியல் செய்தி

தமிழ்நாடு

தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்

Updated : மே 09, 2021 | Added : மே 08, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை: தற்காலிக சபாநாயகராக கு.பி்ச்சாண்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., ஆட்சிஅமைத்தது. ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார். அவரை தொடர்ந்து 33 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். இவர்களுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து அமைச்சர்கள் தங்களது துறைகளின் பணிகளை

சென்னை: தற்காலிக சபாநாயகராக கு.பி்ச்சாண்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.latest tamil newsதமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., ஆட்சிஅமைத்தது. ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார். அவரை தொடர்ந்து 33 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். இவர்களுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து அமைச்சர்கள் தங்களது துறைகளின் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதினிடையே வரும் 11-ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களின் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தொடர்ந்து 12 ம் தேதி சபாநசாயகர் தேர்வு நடைபெற உள்ளது. எம்.எல்.ஏக்கள் பதவி பிரமாணம் செய்வதற்காக தற்காலிக சபநாயகர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்காலிக சபாநாயகராக கீழ்பென்னாத்துார் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள எம்.எல்.ஏ.,வான கு.பிச்சாண்டியை கவர்னர் நியமித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டசபை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: கீழ்பென்னாத்துார் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள எம்.எல்.ஏ.,வான கு.பிச்சாண்டியை,தற்காலிக சபாநாயகராக கவர்னர் நியமித்துள்ளார். அவர், 10 ம் தேதி காலை 11 மணிக்கு கவர்னர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொள்வார் என தெரிவித்து உள்ளார்.


latest tamil news

பிச்சாண்டி பயோ - டேட்டா


பெயர் : கு.பிச்சாண்டி, 67,
மனைவி : தேனருவி
மகள்கள் : தீபலட்சுமி, திவ்யா, சரண்யா, ஐஸ்வர்யா என நான்கு மகள்கள், அனைவரும் திருமணமானவர்கள்.
கல்வி : எம்.ஏ.,
தொழில் : விவசாயம்
கட்சி பதவி : 1984: மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர், 1992- 2000 வரை மூன்று முறை திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர்.
2001: தி.மு.க., மண்டலச் செயலாளர்
1986: திருவண்ணாமலை நகர மன்ற உறுப்பினர்.
1989 -1991, 1996 - 2001, வீட்டு வசதி துறை அமைச்சர்,
2001 - 2006 , 2006 - 2011 வரை திருவண்ணாமலை தொகுதி எம்.எல்.ஏ.,
2016 மற்றும் தற்போது கீழ்பென்னாத்துார் தொகுதி எம்.எல்.ஏ.,

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
09-மே-202105:52:27 IST Report Abuse
meenakshisundaram எந்த ஜாதிக்கு மந்திரி பதவியை கொடுக்களையோ அந்தா ஜாதிக்கு இந்த பதவியை கொடுத்து ஸ்டாலின் ஜாதி பேதமற்ற ஆட்சியை வழங்க வேணுமாய் கேட்டுக்கொள்கிறேன் .வீரமணி போன்றோ ஐடியா கொடுக்கலாம் .
Rate this:
Cancel
Anjankumar Raghavan - Chennai,இந்தியா
08-மே-202123:08:57 IST Report Abuse
Anjankumar Raghavan 1989முதல் 1991 வரை எம்.எல்.ஏ, 1996 முதல் 2001 வரை வீட்டுவசதித்துறை அமைச்சர். 2001 முதல் 2011 வரை தி.மலை எம்.எல்.ஏ. 2016 முதல் இன்றுவரை கீழ்பென்னாத்தூர் எம்.எல்.ஏ. கலைஞர் "தம்பி பிச்சாண்டி சட்டமன்றக் கூட்ட நாட்களில் துவங்கும் நேரம் முதல் முடியும் நேரம் வரை ஒழுக்கமான மாணவர் போல நேரம் தவறாமல் சபையில் இருப்பார்" என்று மனமாரப் பாராட்டியதுண்டு. கறைபடியாத நேர்மையான அமைச்சர் என்று பெயரெடுத்தவர். தற்காலிக சபா நாயகர் என்றால் அவர் சபா நாயகர் இல்லை என்று ஆகிறது. ஆறாவது முறை சட்டமன்ற உறுப்பினர், பிச்சாண்டி அமைச்சரும் இல்லை, சபாநாயகரும் இல்லை என்றால் திமுக தலைவர், முதல்வர் ஸ்டாலின் சுய பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.
Rate this:
Cancel
Kumzi தள்ளுபடி டோப்பா சூட்லீன் - trichy,யுனைடெட் கிங்டம்
08-மே-202122:29:57 IST Report Abuse
Kumzi தள்ளுபடி டோப்பா சூட்லீன்  பிச்சாண்டி சார் ஒரு டோப்பாவ வாங்கி மாட்டுங்க சார் கண்ணு கூசுது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X