பொது செய்தி

இந்தியா

2டிஜி' வந்தாச்சு கொரோனா தடுப்பு மருந்து: சாதித்த டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள்

Updated : மே 10, 2021 | Added : மே 08, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
புதுடில்லி:கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கு வழங்கக் கூடிய தடுப்பு மருந்தை பயன்படுத்த, டி.ஜி.சி.ஐ., எனப்படும், இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மருந்தை, டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.கொரோனா வைரசுக்கு எதிராக, தற்போது நாட்டில், 'கோவாக்சின்,
2டிஜி' வந்தாச்சு கொரோனா தடுப்பு மருந்து: சாதித்த டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள்

புதுடில்லி:கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கு வழங்கக் கூடிய தடுப்பு மருந்தை பயன்படுத்த, டி.ஜி.சி.ஐ., எனப்படும், இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மருந்தை, டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கொரோனா வைரசுக்கு எதிராக, தற்போது நாட்டில், 'கோவாக்சின், கோவிஷீல்டு' என, இரண்டு விதமான தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இரண்டும், நம் நாட்டில் தயாரிக்கப்படுகின்றன. இதைத் தவிர, ரஷ்ய தயாரிப்பான, 'ஸ்புட்னிக் வி' தடுப்பூசியை பயன்படுத்தவும், மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உள்ளோருக்கு, 'ரெம்டெசிவிர்' உள்ளிட்ட மருந்துகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், கொரோனா தொற்று ஏற்பட்டு, மிதமானது முதல், தீவிர பாதிப்பு உள்ளவர்களுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது; இதை பயன்படுத்த, டி.ஜி.சி.ஐ., அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக, ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு, மிகச் சிறந்த பலன் அளிக்கக் கூடிய, உயிர் பலியை தடுக்கக் கூடிய, '2டிஜி' எனப்படும், '2 டி ஆக்சி டி குளுக்கோஸ்' என்ற தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.

'இன்மாஸ்' எனப்படும், நியூக்ளியர் மருத்துவம் மற்றும் சார்பு அறிவியல் மையம், டி.ஆர்.டி.ஓ., ஆகியவை, தெலுங்கானா மாநிலம், ஐதராபாதைச் சேர்ந்த, 'டாக்டர் ரெட்டிஸ்' நிறுவனத்துடன் இணைந்து, இந்த மருந்தை தயாரித்துள்ளன. மூன்று கட்டங்களாக இந்த மருந்து பரிசோதனை செய்யப்பட்டு, அதில் சிறந்த பலன் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது இரண்டாவது அலை பாதிப்பு தீவிரமாக உள்ள நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர், ஆக்சிஜன் தேவைப்படுவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளன. இது போன்றவர்கள், மிக வேகமாக பாதிப்பில் இருந்து மீள்வது, இந்த மருந்து பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

பொடி வடிவில் உள்ள இந்த மருந்தை, தண்ணீரில் கரைத்து கொடுக்க வேண்டும். இந்த மருந்து, வைரசால் பாதிக்கப்பட்ட செல்களில் செயல்பட துவங்கும். வைரஸ் பரவுவது தடுக்கப்பட்டு, அது வெளியேற்றப்படுகிறது. இந்த மருந்தால், மருத்துவமனையில் இருக்க வேண்டிய காலம் குறைவதுடன், உயிர் பலியும் வெகுவாக குறைகிறது; ஆக்சிஜன் தேவையும் குறையும்.

குளுக்கோஸ் அடிப்படையிலான மருந்து என்பதால், நம் நாட்டிலேயே அதிகளவில் இதை தயாரிக்க முடியும்.தற்போது பயன்பாட்டில் உள்ள மருந்துகளைவிட, இந்த மருந்தை பயன்படுத்துவதால், 2.5 நாட்களுக்கு முன்பே, இயல்பு நிலைக்கு திரும்ப முடியும்.தற்போதுள்ள மருந்துகளைவிட, இந்த மருந்தை எடுத்துக் கொள்வதால், ஆக்சிஜன் தேவை, 42 சதவீதம் குறையும். மூன்றாம் நாளில் இருந்தே, இதன் பலன் தெரிய வரும். வயதானவர்களுக்கும் சிறப்பான பலன்களை அளிக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
09-மே-202120:34:51 IST Report Abuse
Tamilnesan பொது மக்கள் பயன்பாட்டிற்கு எப்போது வரும்? அதை பற்றி தகவல் இல்லையே.
Rate this:
Cancel
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),,இந்தியா
09-மே-202113:00:00 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு காங்கிரஸ் திமுக கொள்ளையர்கள் ஆட்சியில் மக்கள் பணம் பல வழிகளில் கொள்ளை. அதில் ஒன்றுதான் சரித்திரம் பேசும் 2ஜி மோடி அரசில் மக்கள் உயிர் காகும் 2T ஜி..ஒரு சின்ன வித்தியாசத்தில் இப்போது மக்களுக்கு எவ்வளவு பெருமை..
Rate this:
Cancel
Thesa pakthi ulla nanban - chennai,இந்தியா
09-மே-202112:51:11 IST Report Abuse
Thesa pakthi ulla nanban எப்போ பார்த்தாலும் மோடி எதிர்ப்பு தான் தலபுராணத்துக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X