பொது செய்தி

இந்தியா

சீன ராணுவம் உருவாக்கிய உயிரி ஆயுதமா கொரோனா?

Updated : மே 10, 2021 | Added : மே 08, 2021 | கருத்துகள் (38)
Share
Advertisement
புதுடில்லி:கொரோனா வைரஸ் பரவல் துவங்கியதற்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே, இது போன்ற உயிரி ஆயுதத்தை உருவாக்க சீனா திட்டமிட்டது, தற்போது தெரியவந்துள்ளது.நம் அண்டை நடான சீனாவின் வூஹான் நகரில், 2019 இறுதியில், கொரோனா வைரஸ் முதலில் பரவியது. உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு பரவி, தற்போதும் அதன் தாக்கம் குறையவில்லை. நம் நாட்டில், கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை தற்போது
 சீன ராணுவம், உருவாக்கம், உயிரி ஆயுதம், கொரோனா?

புதுடில்லி:கொரோனா வைரஸ் பரவல் துவங்கியதற்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே, இது போன்ற உயிரி ஆயுதத்தை உருவாக்க சீனா திட்டமிட்டது, தற்போது தெரியவந்துள்ளது.

நம் அண்டை நடான சீனாவின் வூஹான் நகரில், 2019 இறுதியில், கொரோனா வைரஸ் முதலில் பரவியது. உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு பரவி, தற்போதும் அதன் தாக்கம் குறையவில்லை. நம் நாட்டில், கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை தற்போது தீவிரமாக உள்ளது.

இந்நிலையில், 'சார்ஸ் கொரோனா வைரஸ்' என்ற வைரசை செயற்கையாக உருவாக்கி, அதை உயிரி ஆயுதமாக பயன்படுத்த சீனா திட்டமிட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பான சீன ராணுவத்தின் ரகசிய ஆவணங்கள், அமெரிக்க வெளியுறவு துறைக்கு கிடைத்துள்ளதாக, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே, 2015ல், சீன ராணுவத்தின் விஞ்ஞானிகள் மற்றும் பொது சுகாதார நிபுணர்கள் இணைந்து, சார்ஸ் கொரோனா என்ற வைரசை உருவாக்கும் திட்டத்தை தயாரித்தனர். இந்த வைரசை, தேவைப்படும்போது, உயிரி ஆயுதமாக பயன்படுத்தவும் திட்டமிட்டனர். போர் காலத்தின் போது மட்டுமல்லாமல், தன்னை எதிர்க்கும் நாடுகள் மீதும் பயன்படுத்துவதற்கு சீனா திட்டமிட்டது.வைரஸ் இயற்கையாக உருவானதாக தோன்றும் அளவுக்கு ஆய்வுகள் இருக்க வேண்டும். எதிர்காலத்தில் உலக நாடுகள் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கும், குற்றஞ்சாட்டினால் மறுக்கும் அளவுக்கு இயற்கையாகவும் இருக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டிருந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P.SENTHIL - COIMBATORE,இந்தியா
11-மே-202112:30:20 IST Report Abuse
P.SENTHIL அன்பு நண்பர்களே ஏன் சீன மீது உலக நாடுகள் சேர்ந்து போர் தொடுக்க கூடாது. இல்லையேல் சீனாக்காரன் அனைவரையும் அழித்துவிடுவான்.
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
09-மே-202118:59:50 IST Report Abuse
Rasheel இதில் சில உண்மைகளை நாம் புரிந்து கொள்ளை வேண்டும் இதன் முதல் அலை 60 வயதுக்கு மேற்பட்டோரை இறக்க செய்தது. இரண்டாவது உழைக்கும் 25-45 வயதினரை கொல்கிறது. வரப்போகும் மூன்றாவது அலை 5-15 வயதினரை கொல்ல போவதாக பத்திரிகைகள் எழுதுகின்றன. இந்தியாவை சுற்றி உள்ள நாடுகளான பர்மா பாக்கிஸ்தான், திபெத், இலங்கை போன்ற நாடுகளில் இதன் பாதிப்பு இல்லேவே இல்லை. நமக்கு தெரிந்த நியாயமான கேள்விகள் - ஒரு உரு மாறும் வைரஸ்க்கு ,எப்படி நோயுள்ளவரின் வயதுக்கு தகுந்த மாதிரி பாதிக்கும்? இரண்டு - இந்த வைரஸ் சீனாவின் நட்பு நாடுகளை ஏன் பாதிக்கவில்லை?
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
09-மே-202117:58:09 IST Report Abuse
Endrum Indian இதைத்தான் Bio Weapon என்று சொல்வார்கள்???வேடிக்கை என்னவென்றால் இந்தியாவில் 4 லட்சத்திற்கும் (137.8 கோடி ஜனத்தொகை) அதிகமானவர்கள் கொரோன தொற்றினால் பாதிக்கப்படுகின்றார்கள் சீனாவில் வெறும் 11 பேர் இன்று அது 19 பேராம் (142 கோடி ஜனத்தொகை) அது மிக பெரிய பாதிப்பாம்????
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X