பொது செய்தி

இந்தியா

நான்கு மாநில முதல்வர்களுடன் பிரதமர் போனில் ஆலோசனை

Updated : மே 10, 2021 | Added : மே 08, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
புதுடில்லி:கொரோனா நிலவரம் தொடர்பாக, தமிழகம், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநில முதல்வர்களுடன், பிரதமர் மோடி, தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.நடவடிக்கைகொரோனா நிலவரம் தொடர்பாக, கடந்த சில நாட்களாக, மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச கவர்னர்களுடன், பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில், மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவை,
 நான்கு, மாநில முதல்வர்கள், பிரதமர் ,ஆலோசனை

புதுடில்லி:கொரோனா நிலவரம் தொடர்பாக, தமிழகம், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநில முதல்வர்களுடன், பிரதமர் மோடி, தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.


நடவடிக்கை

கொரோனா நிலவரம் தொடர்பாக, கடந்த சில நாட்களாக, மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச கவர்னர்களுடன், பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில், மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவை, பிரதமர் மோடி நேற்று, தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார்.

பிரதமருடன் நடத்திய ஆலோசனை பற்றி, உத்தவ் தாக்கரே அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது:கொரோனா நிலவரம் பற்றி கேட்டறிந்த பிரதமர், தொற்றின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த, மாநில அரசு சிறப்பாக நடவடிக்கை எடுத்து வருவதற்கு பாராட்டு தெரிவித்தார்.


வலியுறுத்தல்



தொற்று பரவலை கட்டுப்படுத்த, மத்திய அரசு தெரிவித்துள்ள யோசனைகளை, மாநில அரசு பின்பற்றி வருவதாக, பிரதமரிடம் தெரிவித்த முதல்வர் உத்தவ் தாக்கரே, மாநிலத்துக்கு தேவையான ஆக்சிஜனை, மத்திய அரசு வழங்க வேண்டும் என, வலியுறுத்தினார். இதை, பிரதமர் ஏற்றுக் கொண்டார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுடன், பிரதமர் ஆலோசனை நடத்தினார்.''மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதையும், குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்தும், பிரதமரிடம் விளக்கினேன்,'' என, சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.

இதேபோல், தமிழக முதல்வர் ஸ்டாலின், ஹிமாச்சல் முதல்வர் ஜெய்ராம் தாக்குர் ஆகியோருடனும் ஆலோசித்த பிரதமர், ''தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும்,'' என, அவர்களிடம் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shroog - Mumbai ,இந்தியா
09-மே-202121:58:27 IST Report Abuse
Shroog மோடி செய்யும் ஆட்சியை உலகம் பார்த்து சிரிக்கிறது.
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
09-மே-202120:19:09 IST Report Abuse
bal அவங்க சொல்பேச்சு கேட்க மாட்டாங்க...அப்பு...போன வருடம் மாதிரி சொந்த முடிவு முழு இந்தியாவுக்கு எடுங்க...
Rate this:
Cancel
GBR -  ( Posted via: Dinamalar Android App )
09-மே-202118:46:39 IST Report Abuse
GBR innum alosanai pannikitte irunga. Vera edhuvum pannadheenga
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X