எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

'ரெம்டெசிவிர்' மருந்துக்கு மக்களை அல்லாட விடுவது ஏன்?

Updated : மே 09, 2021 | Added : மே 08, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
தமிழகத்தில், 'ரெம்டெசிவிர்' மருந்துக்கு, மக்கள் அல்லாடுகின்றனர். இந்நிலையை தவிர்க்க, மாற்று யுக்தியை, ஏன் மாநில அரசு சிந்திக்க வில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், நுரையீரல் பாதிப்பு, மூச்சு திணறலால் பாதிக்கப்படுவோர்களுக்கு, ரெம்டெசிவிர் என்ற மருந்து, பயனளிக்க கூடியதாக உள்ளது. எதிர்வரும் சவால்கள்இதனால், அரசு மற்றும்
ரெம்டெசிவிர், மருந்து,  மக்கள்,

தமிழகத்தில், 'ரெம்டெசிவிர்' மருந்துக்கு, மக்கள் அல்லாடுகின்றனர். இந்நிலையை தவிர்க்க, மாற்று யுக்தியை, ஏன் மாநில அரசு சிந்திக்க வில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், நுரையீரல் பாதிப்பு, மூச்சு திணறலால் பாதிக்கப்படுவோர்களுக்கு, ரெம்டெசிவிர் என்ற மருந்து, பயனளிக்க கூடியதாக உள்ளது.


எதிர்வரும் சவால்கள்

இதனால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளில், 30 சதவீதத்திற்கு மேற்பட்டோருக்கு, ரெம்டெசிவிர் மருந்து தேவையாக உள்ளது.மருந்து தேவைப்படும் நோயாளிகளுக்கு, அவர்களின் உறவினர்களிடம், டாக்டர்கள் பரிந்துரை சீட்டு அளித்து வருகின்றனர். அந்த சீட்டை வைத்து, தெரு தெருவாக, மருந்து கடைகளில் தேடி அலைந்தனர்.

மருந்து கிடைக்காத நிலையில், நோயாளிகளின் நலன் கருதி, மாநில அரசிடமிருந்த, ரெம்டெசிவிர் மருந்தை, கீழ்ப்பாக்கம்அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில், தமிழக மருத்துவ பணிகள் கழகம் விற்பனை செய்தது.அங்கு விற்பனை துவங்கிய நாள் முதல், ஏராளமானோர் குவிய துவங்கினர்.

குறிப்பாக, நாள்தோறும், 5,000ரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததால், மருந்து வாங்க, மூன்று நாட்கள் வரை ஆனது. அதிகளவில், மருந்துகள்விற்பனையகத்திற்கு வந்ததால், அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்து வழங்கப்படவில்லை.இதனால், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும், ரெம்டெசிவிர் மருந்துக்கான பரிந்துரை சீட்டை, டாக்டர்கள் அளித்து வருகின்றனர்.

குறிப்பாக, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில், மருந்து இல்லாமல், நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இவற்றை தவிர்க்கும் வகையில், சென்னையுடன்,மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய, ஐந்து மருத்துவமனைகளில், ரெம்டெசிவிர் மருந்து விற்பனை துவங்கியுள்ளது. இது, வரவேற்கத்தக்கது என்றாலும், எதிர்வரும் சவால்களை சமாளிக்க கூடியதாக இல்லை என, மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


நடவடிக்கை

இது குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது:தமிழகத்தில், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இனி வரும் நாட்களில், இந்த எண்ணிக்கை பல மடங்கு உயரும். அப்போது, மூச்சு திணறலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் ரெம்டெசிவிர் தேவை, தற்போதைய நிலையை விட, பல மடங்கு உயரும். எனவே, மக்களை அல்லாட விடாமல், நேரடியாக, மருத்துவமனைகளில் நோயாளிகளின் நிலை அறிந்து, அவர்களுக்கு தேவையான மருந்துகளை, அரசு வழங்க வேண்டும்.அது தான், நிரந்தர தீர்வாக இருக்கும். இல்லையென்றால், கொரோனா நோயாளிகளின் உறவினர்கள், பல இடங்களுக்கு பயணித்து, கொரோனா நோயாளியாக மாறி, அவர்களும் மருத்துவமனைகளில் அல்லாடும் நிலை ஏற்படும். மருத்துவமனைகளில், தேவைக்கு அதிகமாக மருந்துகளை வாங்கி கொள்கின்றனர் என, சாக்கு போக்கு கூறாமலும், மக்களை அல்லாட விடாமலும், ரெம்டெசிவிர் மருந்தை, மருத்துவமனைகளுக்கே நேரடியாக வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், இதற்கு முன், வாரத்திற்கு, 59 ஆயிரம் குப்பி, ரெம்டெசிவிர் மருந்துகள் வழங்கப்பட்டன. தற்போது, மத்திய அரசிடமிருந்து, மிகக் குறைந்த அளவில், மருந்துகள் வழங்கப்படுகின்றன. இதனால், அனைத்து மருத்துவமனைகளுக்கும் வழங்க முடியாத நிலை உள்ளது. விரைவில், மாநில அரசிடம் ஆலோசித்து, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
-- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
10-மே-202108:42:45 IST Report Abuse
தல புராணம் தேவையற்ற மருந்தை அத்தியாவசிய மருந்தாக்கிய நமது மருத்துவ கொள்ளை கூடங்கள் தான்.
Rate this:
Cancel
Indian - kailasapuram,இந்தியா
09-மே-202114:49:16 IST Report Abuse
Indian அது தான் நம் நாடு ..
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
09-மே-202108:23:57 IST Report Abuse
RajanRajan மத்திய அரசுக்கு உள்ளூர் டிரக் மாபியாக்கள் கொடுக்கும் நெருக்கடிகளில் இதுவும் ஓன்று. பணம் படுத்தும் பாடு இருக்கே ஒரு அளவில்லாமால் உயிர் பலிக்கு கூட அஞ்சவே அஞ்சாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X