பொது செய்தி

இந்தியா

வாய்ப்பாடு தெரியாததால் திருமணத்தை நிறுத்திய பெண்

Added : மே 08, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
பன்வாரி:மணமகனுக்கு இரண்டாம் வாய்ப்பாடு தெரியாததால், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இளம் பெண், திருமணத்தை நிறுத்திஉள்ளார்.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்து உள்ளது.மஹோபா மாவட்டம் பன்வாரியில், திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்தது. மாப்பிள்ளை ஊர்வலம் முடிந்து, திருமணச் சடங்கு நடத்த தயாராக இருந்தனர்.உற்றார், உறவினர்கள் கூடியிருந்த
வாய்ப்பாடு தெரியாததால் திருமணத்தை நிறுத்திய பெண்

பன்வாரி:மணமகனுக்கு இரண்டாம் வாய்ப்பாடு தெரியாததால், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இளம் பெண், திருமணத்தை நிறுத்திஉள்ளார்.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்து உள்ளது.மஹோபா மாவட்டம் பன்வாரியில், திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்தது. மாப்பிள்ளை ஊர்வலம் முடிந்து, திருமணச் சடங்கு நடத்த தயாராக இருந்தனர்.உற்றார், உறவினர்கள் கூடியிருந்த நிலையில், மாப்பிள்ளையின் கல்வி தகுதி குறித்து அவரது பெற்றோர் கூறியது பொய்யாக இருக்குமோ என, மணமகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

மந்திரங்கள் ஓதுவதை நிறுத்தச் சொல்லி, மாப்பிள்ளையிடம், கல்வித் தகுதி குறித்து கேட்டு உள்ளார். இரண்டாம் வாய்ப்பாடு சொல்லும்படி கூறியுள்ளார். வாய்ப்பாடு தெரியாமல் மாப்பிள்ளை திணறினார்.இதையடுத்து திருமணத்தை நிறுத்துவதாக மணமகள் கூறினார். இரு தரப்பினர் பேச்சு நடத்தியும், மணப்பெண் மசியவில்லை.

போலீசார் தலையிட்டும், 'அடிப்படை கணக்கு தெரியாதவரை திருமணம் செய்ய மாட்டேன்' என, அந்த பெண் கூறியுள்ளார். கணக்கு தெரியாததால் திருமணம் நின்ற சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-மே-202117:42:16 IST Report Abuse
ஆரூர் ரங் நல்ல வேளை நம்மூர் கணித மேதை😉😉 யிடம் இதனைக் கேட்க வில்லை
Rate this:
Cancel
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
09-மே-202112:28:51 IST Report Abuse
Amirthalingam Shanmugam செய்தி ஓ.கே. அதற்க்கு ஏன் ஒன்றிலிருந்து பத்து வரைக்கும் உள்ள " வாய்ப்பாட்டை" பிரசரித்துள்ளீர்கள்.உமது வாசகர்கள் மீது என்ன திடீர் கரிசனம்.
Rate this:
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),,இந்தியா
09-மே-202113:02:19 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டுஹாஹாஹா வாசகர்கள் மீதா? இல்லை .....
Rate this:
Cancel
sivakumar - chennai,இந்தியா
09-மே-202103:57:15 IST Report Abuse
sivakumar நல்ல வேளை, பதினாறாம் வாய்பாடு கேக்கல.... அப்புறம் டாக்டரா இருந்தால்கூட டன்டனக்காதான்😂😂😂 முன்கூட்டியே இந்த முயற்சியை செய்திருக்கலாம் அந்த (அறிவாளி)ப்😀 பெண்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X