கடந்த 7 நாட்களாக 180 மாவட்டங்களில் கொரோனா இல்லை..!

Updated : மே 08, 2021 | Added : மே 08, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதுடில்லி: கடந்த ஏழு நாட்களாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 180 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் அறவே இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல் அளித்துள்ளார்.இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை அதிவேகமாகப் பரவி வருகிறது. இதனை அடுத்து தமிழகம், கேரளா, பீகார், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில்

புதுடில்லி: கடந்த ஏழு நாட்களாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 180 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் அறவே இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல் அளித்துள்ளார்.



latest tamil news



இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை அதிவேகமாகப் பரவி வருகிறது. இதனை அடுத்து தமிழகம், கேரளா, பீகார், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஊரடங்கு மாநில அரசுகளால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஒருபக்கம் அதிகரித்துக்கொண்டிருக்க, மரணமடைவோரது எண்ணிக்கை சில இடங்களில் அதிகரித்து மயானங்களில் கூட்டம் அதிகரிக்கிறது.
இதனையடுத்து மத்திய சுகாதாரத்துறை வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 180 மாவட்டங்களில் கடந்த ஏழு நாட்களாக ஒரு வைரஸ் பாதித்த நோயாளிகூட தென்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இது இந்திய சுகாதாரத் துறைக்கு பெருமை சேர்த்துள்ளது.


latest tamil news



கடந்த 21 நாட்களாக 54 மாவட்டங்களில் வைரஸ் தாக்கம் ஒருவருக்கு கூட இல்லை என்றுள்ளார். ஆனால் மறுபக்கம் கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 187 பேர் வைரஸ் தாக்கத்தில் மரணமடைந்துள்ளனர்.
இதனையடுத்து வைரஸ் தாக்கத்தால் பலியானோரது மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 38 ஆயிரத்து 270 ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த மே 7-ஆம் தேதிவரை 16 கோடியே 73 லட்சத்து 46 ஆயிரத்து 544 தடுப்பு மருந்து குப்பிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
09-மே-202114:36:07 IST Report Abuse
Loganathan Kuttuva கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகளுடன் பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும் .பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்கள் உதவி செய்ய வேண்டும் .
Rate this:
Cancel
Indian - kailasapuram,இந்தியா
09-மே-202110:14:42 IST Report Abuse
Indian தகுதி இல்லாத நபர்களை எல்லாம் அமைச்சர் ஆக்கினால் ... அரசுக்கு எப்படி நல்ல பெயர் கிடைக்கும் ,,,..நாட்டில் கொரோன நிலையை அறியாமல் இப்படி ஒரு பேட்டி கொடுத்தால் , அசிங்கம் தான்
Rate this:
Cancel
Indian - kailasapuram,இந்தியா
09-மே-202108:47:42 IST Report Abuse
Indian சுகாதார துறை மந்திரியாக இருக்க தகுதி இல்லாத நபர் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X