புதிய பார்லிமென்ட் தேவையா? பிரதமருக்கு சிவசேனா கேள்வி!

Updated : மே 10, 2021 | Added : மே 08, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
மும்பை:'கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக உள்ள நிலையில், சின்ன சின்ன நாடுகள் கூட நமக்கு உதவி வருகின்றன. இந்நிலையில், பிரதமருக்கு புதிய இல்லம், புதிய பார்லிமென்ட் கட்டுமான பணிகள் தேவையா' என, சிவசேனா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்., கூட்டணி அரசு அமைந்துள்ளது. சிவசேனா கட்சியின் சார்பில்
 புதிய பார்லிமென்ட், தேவையா?, பிரதமர்,சிவசேனா, கேள்வி!

மும்பை:'கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக உள்ள நிலையில், சின்ன சின்ன நாடுகள் கூட நமக்கு உதவி வருகின்றன. இந்நிலையில், பிரதமருக்கு புதிய இல்லம், புதிய பார்லிமென்ட் கட்டுமான பணிகள் தேவையா' என, சிவசேனா கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்., கூட்டணி அரசு அமைந்துள்ளது. சிவசேனா கட்சியின் சார்பில் வெளியாகும், 'சாம்னா' பத்திரிகையில் நேற்று வெளியான கட்டுரையில் கூறப்பட்டுஉள்ளதாவது:நம் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், பல சின்ன சின்ன நாடுகள் கூட உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

நேரு, இந்திரா குடும்பம் உருவாக்கிய முறைகளே, நம் நாட்டை காப்பாற்றி வருகின்றன என்பது தெளிவாக தெரிகிறது. அதே நேரத்தில், தற்போதைய ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளால், மிக மோசமான பாதிப்புகளை சந்தித்து வருகிறோம்.

இந்நிலையில், 20 ஆயிரம் கோடி ரூபாயில், பிரதமருக்கு புதிய இல்லம், புதிய பார்லிமென்ட் கட்டுமான பணிகளை தொடர வேண்டுமா. மற்ற நாடுகளின் உதவியை பெரும் நிலையில், இந்த திட்டத்தை தொடர வேண்டுமா என்பது குறித்து யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THANGARAJ - CHENNAI,இந்தியா
09-மே-202120:24:43 IST Report Abuse
THANGARAJ புது கட்டடத்திற்கு பதிலாக, இருக்கும் கட்டடத்தின் மீது மேலும் ஒரு மாடி எடுத்தால், செலவுகள் குறையும், இட வசதியும் கூடும் அல்லவா?
Rate this:
Cancel
Robertbalan - Tirupur,இந்தியா
09-மே-202120:13:38 IST Report Abuse
Robertbalan MP seats will be increased as 888 in 2026 This is necessary It can't be stopped
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
09-மே-202117:52:45 IST Report Abuse
Endrum Indian மிகச்சரியான கேள்வி இப்படி இருந்தால் சிவ சேனா என்று ஒரு கட்சி தேவையா இந்தியாவிற்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X