ஆந்திராவில் வெடி விபத்து 10 பேர் உடல் சிதறி பலி

Added : மே 08, 2021
Share
Advertisement
அமராவதி : ஆந்திராவில், சுண்ணாம்பு சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி, 10 பேர் உடல் சிதறி பலியாகினர். ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான, ஒய்.எஸ்.ஆர்., - காங்., ஆட்சி நடக்கிறது. கடப்பா மாவட்டம், மாமில்லபள்ளி கிராம எல்லையில் உள்ள ஒரு சுண்ணாம்புச் சுரங்கத்தில், நேற்று தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். சுரங்கத்திற்கு வெடி வைப்பதற்கு, ஜெலட்டின்

அமராவதி : ஆந்திராவில், சுண்ணாம்பு சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி, 10 பேர் உடல் சிதறி பலியாகினர்.

ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான, ஒய்.எஸ்.ஆர்., - காங்., ஆட்சி நடக்கிறது. கடப்பா மாவட்டம், மாமில்லபள்ளி கிராம எல்லையில் உள்ள ஒரு சுண்ணாம்புச் சுரங்கத்தில், நேற்று தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். சுரங்கத்திற்கு வெடி வைப்பதற்கு, ஜெலட்டின் குச்சிகளுடன், வாகனம் ஒன்று வந்தது. பின், வாகனத்தில் இருந்த அந்த ஜெலட்டின் குச்சிகளை, இறக்கி வைக்கும் பணிகள் நடந்தன. அப்போது ஜெலட்டின் குச்சிகள் திடீரென வெடித்துச் சிதறின.

இதில் சிக்கி, அங்கிருந்த, 10 பேர், உடல் சிதறி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த வாகனம் முற்றிலும் தீயில் சேதம்அடைந்தது.மீட்புப் படையினர், உயிரிழந்தோரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதில், ஐந்து பேரின் அடையாளங்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, கடப்பா மாவட்ட அதிகாரிகளை தொலைபேசியில் அழைத்து, முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, இந்த வெடிவிபத்து குறித்து கேட்டறிந்தார். அப்போது, இதுகுறித்து விசாரணை நடத்த, அதிகாரி களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X