போர் கப்பலில் திடீர் தீ விபத்து

Added : மே 09, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மும்பை : கடற்படையின், ஐ.என்.எஸ்., விக்ரமாதித்யா போர்க் கப்பலில், நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. நம் கடற்படைக்கு சொந்தமான விமானந்தாங்கி போர்க் கப்பலான, ஐ.என்.எஸ்., விக்ரமாதித்யா, கர்நாடகாவின் கார்வர் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது.இந்த கப்பலின் மாலுமிகள் இருக்கும் இடத்தில், நேற்று காலை திடீரென

மும்பை : கடற்படையின், ஐ.என்.எஸ்., விக்ரமாதித்யா போர்க் கப்பலில், நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

உடனடியாக தீ அணைக்கப்பட்டதால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. நம் கடற்படைக்கு சொந்தமான விமானந்தாங்கி போர்க் கப்பலான, ஐ.என்.எஸ்., விக்ரமாதித்யா, கர்நாடகாவின் கார்வர் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது.இந்த கப்பலின் மாலுமிகள் இருக்கும் இடத்தில், நேற்று காலை திடீரென தீப்பற்றியது. அங்கிருந்த பணியாளர்கள், உடனடியாக தீத்தடுப்பு பணிகளில் ஈடுபட்டனர். இதனால், தீ பரவாமல் தடுக்கப்பட்டது.இந்த தீ விபத்தால், கப்பலில் இருந்த பணியாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும், தீப்பற்றியது குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
09-மே-202107:30:23 IST Report Abuse
Darmavan மருத்துவ மனைகளில் தீ , போர் கப்பலில் தீ எல்லாம் இங்குள்ள சீன கைக்கூலிகள்/ தேசவிரோத சக்திகளின் சதி.புலனாய்வு தாழ்ந்து விட்டதா தெரியவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X