பேச்சு, பேட்டி, அறிக்கை| Dinamalar

சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : மே 09, 2021
Share
'அந்த கட்சியை யாரும் கலைக்க வேண்டாம்; தானாக கலைந்து விடும். 'மேக்கப்' போடும் சினிமா கலைஞர் துவக்கிய கட்சி என்பதால், மேக்கப் போல கலைந்து வருகிறதோ...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: தேர்தல் முடிந்ததும், தி.மு.க., தன், 'பி டீம்' ஆன, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தை கலைத்துக் கொண்டிருக்கிறது. 'நல்ல அறிவுரை
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'அந்த கட்சியை யாரும் கலைக்க வேண்டாம்; தானாக கலைந்து விடும். 'மேக்கப்' போடும் சினிமா கலைஞர் துவக்கிய கட்சி என்பதால், மேக்கப் போல கலைந்து வருகிறதோ...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: தேர்தல் முடிந்ததும், தி.மு.க., தன், 'பி டீம்' ஆன, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தை கலைத்துக் கொண்டிருக்கிறது.
'நல்ல அறிவுரை தான். இதுபோல, எல்லா கட்சிகளும், அமைப்புகளும் தங்கள் கட்டடங்களை, வளாகங்களை கொரோனாவுக்காக கொடுத்தால், டில்லியில் பாதிப்பு விரைவில் குறைந்து விடும்...' என, பாராட்டத் தோன்றும் வகையில், பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியம் சுவாமி அறிக்கை: டில்லியில் கொரோனா தொற்று மிகவும் அபாயகரமான நிலையை அடைந்து வருகிறது. பா.ஜ., அலுவலகத்தின், ஆறு மாடிகளையும், கொரோனா சிறப்பு மையமாக மாற்ற வேண்டும். ஏற்கனவே கட்சிக்கு, பழைய அலுவலகம் உள்ளதால், அதை கட்சி பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

'தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், சிமென்ட் விலை குறைக்கப்படும் என்றனரே... சொல்வது ஒன்று, செய்வது வேறா...' என, கேட்கத் தோன்றும் வகையில், பா.ஜ., மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: தி.மு.க., அரசு பதவிக்கு வருகிறது என்று தெரிந்த உடனேயே, ஒரே நாளில், சிமென்ட் விலை, 100 ரூபாய் உயர்ந்துள்ளது. 'உதயசூரியனின்' ஒளி வீச்சால், சிமென்ட் அதிபர்களுக்கு கொண்டாட்டம் தான்.
'ஊரடங்கு போட்டால், நீங்கள் வீட்டில் ஓய்வெடுத்து விடுவீர்கள். நாட்டின் பொருளாதாரம் படுத்து விடுமே என்ன செய்வது என, முதல்வர் ஸ்டாலின் சிந்திக்கிறாரோ என்னவோ...' என, கூறத் துாண்டும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்திருமாவளவன் அறிக்கை: செலவு செய்ய பணம் இருந்தாலும் மருத்துவமனைகளில் படுக்கைகள் இடம் கிடைக்கவில்லை. கிடைத்தாலும், உயிர்காக்கும் ஆக்சிஜன் மற்றும் 'ரெம்டெசிவிர்' ஆகியவை கிடைக்கவில்லை. தற்காப்பு மட்டுமே உயிர் பிழைக்க ஒரே வழி. முக கவசம் அணிவது கட்டாயம். சமூக இடைவெளி மிக அவசியம். ஊரடங்கு உடனடி தேவை.
'இப்படித்தான், இ.பி.எஸ்., ஒன்றும் செய்யவில்லை; மோடி ஒன்றும் செய்யவில்லை என ஸ்டாலின் கூறினார். ஆட்சிக்கு வந்ததும் தான், இருக்கும் பிரச்னைகள் அவருக்குப் புரிகின்றன...' என, கூறத் தோன்றும் வகையில், பா.ஜ., தேசிய செயலர் பி.எல்.சந்தோஷ் அறிக்கை: இந்த பேரிடர் நேரத்தில் பிரதமர் மோடி, நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து, அதிகாரிகளுக்கும், சுகாதாரத்துறை அமைச்சர்களுக்கும் தேவையான உத்தரவுகளை அவ்வப்போது பிறப்பித்து வருகிறார். ஆனால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், எதிர்க்கட்சிகளை சேர்ந்த முதல்வர்கள் கூட, மோடி மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு, அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர்.
'உங்களின் விருப்பம், எந்த காலத்திலும் நிறைவேறாது...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., கலாசார பிரிவு தலைவர், நடிகை காயத்ரி ரகுராம் அறிக்கை: முதல்வராக பொறுப்பேற்ற உடன், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பிறப்பித்துள்ள, ஐந்து உத்தரவுகளை வரவேற்கிறேன். வரும் நாட்களிலும் இதுபோல, வெளிப்படையாக கையெழுத்திட்டு, உத்தரவுகளை பிறப்பிக்க விரும்புகிறேன்.


பேச்சு, பேட்டி, அறிக்கை

'அசோக சின்னம், மூவர்ணக்கொடி, ஒருங்கிணைந்த நாடு போன்ற தேசிய விஷயங்கள் உங்களுக்கு பிடிக்காதே; தப்பாக, உதாரணம் சொல்லி விட்டீர்களோ...' என, கேட்கத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை: நம் கட்சி சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. அசோக சின்னத்திலுள்ள நான்கு சிங்கங்களைப் போல, நான்கு சிறுத்தைகளும் ஒருங்கிணைந்து செயலாற்றி, நான்கு திசைகளிலும், உழைக்கும் மக்களின் குரலை ஓங்கி ஒலிக்க வேண்டுமென வாழ்த்தினேன்.
'ரொம்ப, மார் தட்டாதீங்க... கொஞ்சம் 'வெயிட்' பண்ணி பார்த்து, அதன் பிறகு, தட்டலாமே...' என, அறிவுரை கூறத் தோன்றும் வகையில், தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை: முத்தான ஐந்து அறிவிப்புகள் மூலம், அவரது அரசு, ஏழை, எளிய மக்களின் நலம் நாடுகிற அரசு என்பதை உரக்கச் சொல்லியுள்ளார், நம் முதல்வர் ஸ்டாலின். கொரோனா சுனாமியால் வாழ்வாதாரங்களை இழந்து நிராதரவாக இருக்கும் மக்களுக்கு, 'நானிருக்கிறேன் உங்களுக்கு' என, மார்தட்டி வருகிறார்.
'அப்படியே, உங்களின் கட்சி எப்போது, தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்பதையும் அனுமானித்து சொல்லுங்களேன்...' என, கூறத் துாண்டும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி., ரவிக்குமார் அறிக்கை: தேர்தலுக்குப் பிறகான காட்சிகள் என, இரண்டு நாட்களுக்கு முன் நான் அனுமானித்தவை நடக்கத் துவங்கியுள்ளன. நடிகர் கமல்ஹாசனின், மக்கள் நீதி மய்யம் கட்சியில் தற்காலிக தஞ்சம் புகுந்தவர்கள் கிளம்பத் துவங்கி விட்டனர். பா.ஜ.,வில் சேரப் போகின்றனரா என்பது விரைவில்தெரியும்.

'பிராமண எம்.எல்.ஏ., இல்லாவிட்டாலும், பிராமணரான பிரஷாந்த் கிஷோர் எழுதி கொடுத்தபடி தானே, நம்ம முதல்வர் செயல்பட்டு, ஆட்சியை பிடித்துள்ளார்...' என, சொல்லத் தோன்றும் வகையில், மாநில மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை: பிராமணர் இல்லாத சட்டசபை என்று சிலர், புளகாங்கிதம் அடைகின்றனர். பிராமணர் இருக்கலாம்; பிராமணியம் தான் இருக்கக் கூடாது. ஹிந்துத்துவா என்ற பிராமணிய கோட்பாட்டை பின்பற்றும், பா.ஜ.,வின், நான்கு எம்.எல்.ஏ.,க்கள் இருக்கின்றனர் என்பதை மறக்கக் கூடாது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X