பொது செய்தி

இந்தியா

மருத்துவமனையில் சிகிச்சை பெற கொரோனா சான்று கட்டாயமல்ல

Updated : மே 09, 2021 | Added : மே 09, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி : ' மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெற, பாதிப்பு உறுதி செய்யப்பட்ட சான்று கட்டாயமல்ல' என, மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.கொரோனா நோயாளிகளின் சிகிச்சை தொடர்பான, தேசிய கொள்கையில் திருத்தம் செய்து, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில்

புதுடில்லி : ' மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெற, பாதிப்பு உறுதி செய்யப்பட்ட சான்று கட்டாயமல்ல' என, மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.



latest tamil news



கொரோனா நோயாளிகளின் சிகிச்சை தொடர்பான, தேசிய கொள்கையில் திருத்தம் செய்து, அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள, கொரோனா சுகாதார மையங்களில் சிகிச்சை பெற, கொரோனா பாதிப்பு சான்று கட்டாயமல்ல என, தெரிவிக்கப்படுகிறது. ஓட்டல்கள், பள்ளிகள், விளையட்டு அரங்குகள் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள, கொரோனா பராமரிப்பு மையங்களில், கொரோனா அறிகுறி உள்ளோருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.


latest tamil news



அதுபோல, மருத்துவமனைகளில், மிதமான கொரோனா பாதிப்புக்கும், தீவிர பாதிப்புக்கும் சிகிச்சை அளிக்க தனிப் பிரிவுகள் உள்ளன. இவற்றில் சிகிச்சை பெற வருவோரிடம், கொரோனா பாதிப்பு உள்ளதற்கான பரிசோதனைச் சான்று தர வேண்டும் என, கட்டாயப் படுத்தக் கூடாது. வேறு நகரைச் சேர்ந்தவராக இருந்தாலும், சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும். அவருக்கு, ஆக்சிஜன், அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்டவற்றை வழங்க மறுக்கக் கூடாது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அனைத்து சிகிச்சைகளும் தடையின்றி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அனைத்து மாநிலங்களும் இதை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
09-மே-202116:00:53 IST Report Abuse
vnatarajan வேறு நகரை சேர்ந்தவர் என்று நினைக்காமல் அவர் ஒரு இந்தியன் என்ற எண்ணத்தில் மனிதாபிமானத்துடன் அவருக்கு சிகிச்சை அளிக்கவேண்டும்
Rate this:
Cancel
Nesan - JB,மலேஷியா
09-மே-202110:01:10 IST Report Abuse
Nesan வரவேற்க வேண்டிய விஷயம். ஆனா இந்த புத்தி முதலில் இருந்திருக்க வேண்டும். யாரும் எந்த அறிகுறியும் இல்லாமல் மருத்துவமனைகளுக்கு சென்று கொட்டி கொடுக்க மாட்டாங்க.
Rate this:
Cancel
kosu moolai - nadunilaiyoor,இந்தியா
09-மே-202107:30:02 IST Report Abuse
kosu moolai வந்தாரை வாழவைக்கும் தமிழகத்திற்க்கு வாருங்கள். படுக்கை, ஊசிமருந்து, ஆக்ஸிஜன் எல்லாம் தன்னிறைவை பெற்ற இந்தியாவின் தல சிறந்த மாநிலமாக இருக்கிறோம்.தயவு செய்து மற்ற மாநிலங்களில் இருப்பவர்கள் எங்க ஊர் தமிழ் சேனல்களை பாருங்கள். உண்மையை உணருங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X