பொது செய்தி

இந்தியா

தி.மு.க., 'மாஜி'

Added : மே 09, 2021
Share
Advertisement
சென்னை : உடல்நலக் குறைவால், சிகிச்சை பெற்று வந்த, 'மாஜி' எம்.எல்.ஏ., சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை, திருவொற்றியூர், ஏகவள்ளியம்மன் கோவில் நகரை சேர்ந்தவர், டி.சி.விஜயன், 67. தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ., சில ஆண்டுகளாக, உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார்.நான்கு நாட்களுக்கு முன், மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, திருவொற்றியூர்

சென்னை : உடல்நலக் குறைவால், சிகிச்சை பெற்று வந்த, 'மாஜி' எம்.எல்.ஏ., சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை, திருவொற்றியூர், ஏகவள்ளியம்மன் கோவில் நகரை சேர்ந்தவர், டி.சி.விஜயன், 67. தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ., சில ஆண்டுகளாக, உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார்.நான்கு நாட்களுக்கு முன், மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, திருவொற்றியூர் தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.கடந்த, 1996 சட்டசபை தேர்தலில், தி.மு.க., சார்பில், திருவொற்றியூர் தொகுதியில் வெற்றி பெற்று, 2001ம் ஆண்டு வரை, எம்.எல்.ஏ.,வாக பதவி வகித்தார்.திருவொற்றியூர் நகர சபை தலைவராகவும் இருந்துள்ளார். தி.மு.க., நகரச் செயலர் உள்ளிட்ட, கட்சி பதவிகளும் வகித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X