சம்பவம் செய்தி

தமிழ்நாடு

1,296 பாட்டில் மது பறிமுதல் : இருவர் கைது

Added : மே 09, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
அவிநாசி:ஆம்னி வேனில் கடத்தி செல்லப்பட்ட, 1,296 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.திருப்பூர் மாவட்டம், அவிநாசி மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் முரளி, எஸ்.ஐ., சர்வேஸ்வரன் அடங்கிய குழுவினர், அவிநாசி-, கோவை ரோட்டில் வெள்ளியம்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த மாருதி ஆம்னி (டி.என்.38 பியு 5704) வேனை நிறுத்தி, சோதனை செய்த போது, 27
 1,296 பாட்டில் மது பறிமுதல் : இருவர் கைது

அவிநாசி:ஆம்னி வேனில் கடத்தி செல்லப்பட்ட, 1,296 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.திருப்பூர் மாவட்டம், அவிநாசி மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் முரளி, எஸ்.ஐ., சர்வேஸ்வரன் அடங்கிய குழுவினர், அவிநாசி-, கோவை ரோட்டில் வெள்ளியம்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த மாருதி ஆம்னி (டி.என்.38 பியு 5704) வேனை நிறுத்தி, சோதனை செய்த போது, 27 பெட்டிகளில், 1,296 குவார்ட்டர் மது பாட்டில் இருப்பது தெரியவந்தது.கோவை காளப்பட்டியில் உள்ள ராகவேந்திரா என்பவருக்கு சொந்தமான ஒரு ஓட்டலுக்கு வெள்ளியம்பாளையத்தில் உள்ள 'டாஸ்மாக்' மதுக்கடையில் இருந்து எடுத்து சொல்லப்படுவது தெரியவந்தது. வாகனத்தில் மதுபானங்களை எடுத்து வந்த அறிவழகன், 28, பால்ராஜ் 30 ஆகியோரை மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்தனர். ராகவேந்திரா தலைமறைவானார்.பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களின் மதிப்பு, 1.80 லட்சம் ரூபாய்; ஆம்னி வேனும் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
12-மே-202108:19:13 IST Report Abuse
madhavan rajan லாக் டவுன் சமயத்தில் ஓட்டலுக்கு வருபவர்களுக்கு ஸ்டாக் வைத்திருப்பது ஒரு தவறா? ஒரு நாளைக்கு வேண்டிய சரக்குதான் வாடும் என்று டாஸ்மாக்கில் ஆர்தர் போட்டிருக்கிறார்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X