சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமிக்கு கட்டாய திருமணம்

Added : மே 09, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி : சிறுமிக்கு கட்டாய திருமணம் நடத்தியது தொடர்பாக, தந்தை, மகனை, 'போக்சோ'வில் போலீசார் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் ராஜா, 51. இவரது மனைவி கடந்தாண்டு இறந்து விட்டார்.அதே பகுதியில், ராஜாவின் தங்கை குடும்பத்தினர் வசிக்கின்றனர். ராஜா தங்கையின், 17 வயது மகள், தன் மாமா ராஜா வீட்டிற்கு வந்து சமையல் செய்து

கிருஷ்ணகிரி : சிறுமிக்கு கட்டாய திருமணம் நடத்தியது தொடர்பாக, தந்தை, மகனை, 'போக்சோ'வில் போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் ராஜா, 51. இவரது மனைவி கடந்தாண்டு இறந்து விட்டார்.அதே பகுதியில், ராஜாவின் தங்கை குடும்பத்தினர் வசிக்கின்றனர். ராஜா தங்கையின், 17 வயது மகள், தன் மாமா ராஜா வீட்டிற்கு வந்து சமையல் செய்து கொடுத்து வந்துள்ளார்.இந்நிலையில், ராஜாவின் மகன் ராம்கி, 21 பி.பி.ஏ., பட்டதாரி. தன் வீட்டிற்கு சமையல் செய்ய வந்த, அத்தை மகளிடம் ஆசை வார்த்தை கூறி, அத்துமீறிலில் ஈடுபட்டுள்ளார். திருமணம் செய்து கொள்வதாக கூறி கட்டாயப்படுத்தி, தகாத உறவில் ஈடுபட்டுள்ளார்.இதையறிந்த உறவினர்கள் சிறுமியை ராம்கிக்கு, ஜனவரி, 9ல் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

தனக்கு விருப்பமில்லாமல், திருமணம் செய்து வைத்ததாக, சிறுமி கடந்த, 7ல் கொடுத்த புகார்படி, சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் ராம்கி, அவரது தந்தை ராஜா ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X