சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரட்டை கொலை வழக்கு 7 பேருக்கு 'குண்டாஸ்'

Added : மே 09, 2021
Share
Advertisement
அரக்கோணம் : அரக்கோணம் இரட்டை கொலை வழக்கில், ஏழு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த சோகனுாரை சேர்ந்த அர்ஜுன், சூர்யா ஆகியோர், ஏப்ரல், 7ல் கொலை செய்யப்பட்டனர். இக்கொலை வழக்கில், 13 பேர் கைது செய்யப்பட்டனர். அதில், அரக்கோணம் ஒன்றிய அ.தி.மு.க., - ஐ.டி., பிரிவு செயலர் சத்யா, 25 மற்றும், 22 - 26 வயதுள்ள ஆறு பேர் மீது ஏராளமான வழக்குகள்

அரக்கோணம் : அரக்கோணம் இரட்டை கொலை வழக்கில், ஏழு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த சோகனுாரை சேர்ந்த அர்ஜுன், சூர்யா ஆகியோர், ஏப்ரல், 7ல் கொலை செய்யப்பட்டனர். இக்கொலை வழக்கில், 13 பேர் கைது செய்யப்பட்டனர். அதில், அரக்கோணம் ஒன்றிய அ.தி.மு.க., - ஐ.டி., பிரிவு செயலர் சத்யா, 25 மற்றும், 22 - 26 வயதுள்ள ஆறு பேர் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால், அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜூக்கு, எஸ்.பி., சிவக்குமார் பரிந்துரை செய்தார். அதன்படி, அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் உத்தரவிட்டார். போலீசார் அதற்கான நகலை அவர்களிடம் நேற்று வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X