சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிதி நிறுவனத்தில் தீ வைக்க முயன்ற விவசாயி கைது

Added : மே 09, 2021
Share
Advertisement
தஞ்சாவூர் : தனியார் நிதி நிறுவனத்தில், மண்ணெண்ணை ஊற்றி தீவைக்க முயன்றவரை, போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார் அடுத்த மணலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 42; விவசாயி. கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஆடுதுறையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், நகைகளை அடமானம் வைத்து, 2.10 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.நேற்று முன்தினம் மாலை, நகையை மீட்க

தஞ்சாவூர் : தனியார் நிதி நிறுவனத்தில், மண்ணெண்ணை ஊற்றி தீவைக்க முயன்றவரை, போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார் அடுத்த மணலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 42; விவசாயி. கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஆடுதுறையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், நகைகளை அடமானம் வைத்து, 2.10 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.நேற்று முன்தினம் மாலை, நகையை மீட்க கோபாலாகிருஷ்ணன், நிறுவனத்துக்கு சென்றுள்ளார். அங்கு, 40 ஆயிரம் ரூபாய் வட்டி கட்ட வேண்டும் என, கூறியுள்ளனர்.ஆத்திரமடைந்த கோபாலகிருஷ்ணன், அதிக வட்டி வசூலிப்பதாக கூறி, நிறுவனத்தில் உள்ள பணியாளர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், அவர் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை, பணியாளர்கள் மேல் ஊற்றி தீவைக்க முயன்றார். அதனால், பதட்டமடைந்த நிறுவன ஊழியர் மணிகண்டன், திருவிடைமருதுார் போலீசில் புகார் அளித்தார். போலீசார், கோபாலகிருஷ்ணனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X