கைதிகளுக்கு 'பரோல்' : உச்ச நீதிமன்றம் உத்தரவு

Updated : மே 09, 2021 | Added : மே 09, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி : சிறைகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், கைதிகளுக்கு மீண்டும், 'பரோல்' வழங்கும்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த ஆண்டு மார்ச்சில், சிறைகளில் கொரோனா பரவியதால், ஏராளமான கைதிகள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, 'அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களும், உயர்மட்ட குழு அமைத்து, அதன் பரிந்துரைப்படி, கைதிகளுக்கு, 'பரோல்'

புதுடில்லி : சிறைகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், கைதிகளுக்கு மீண்டும், 'பரோல்' வழங்கும்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



latest tamil news



கடந்த ஆண்டு மார்ச்சில், சிறைகளில் கொரோனா பரவியதால், ஏராளமான கைதிகள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, 'அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களும், உயர்மட்ட குழு அமைத்து, அதன் பரிந்துரைப்படி, கைதிகளுக்கு, 'பரோல்' வழங்கலாம்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், தற்போது கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், சிறைக் கைதிகள் குறித்து, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, நேற்று பிறப்பித்த உத்தரவு:கைதிகளின் ஆரோக்கியம் மற்றும் வாழ்வுரிமை, கவலை அளிப்பதாக உள்ளது. இது, சிறை காவலர்களுக்கும் பொருந்தும். எனவே, கடந்த ஆண்டு, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட, உயர்மட்ட குழு பரிந்துரையின் படி, பரோலில் சென்ற கைதிகள் அனைவருக்கும் மீண்டும், 90 நாட்களுக்கு பரோல் வழங்க வேண்டும். இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.


latest tamil news



மேலும், வரதட்சணை கொடுமை வழக்கு மட்டுமின்றி, ஏழு ஆண்டுகளுக்கு குறைவான தண்டனைக்குரிய வழக்கு தொடர்பாகவும், அவசியமின்றி கைது செய்வதை தவிர்க்கும்படி, அனைத்து மாநில அரசுகளும், போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மன்னிப்பு - Madurai,இந்தியா
09-மே-202116:47:11 IST Report Abuse
மன்னிப்பு எந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், பங்களாதேஷா? இல்லை பர்மா ரோங்கியாவா? அதுகெல்லாம் தானே நீங்க கவலைப் பட வேண்டும். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
09-மே-202109:35:13 IST Report Abuse
Lion Drsekar நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேலைவாய்ப்புகள் முதுகெலும்பே மாண்புமிகு கைதிகள்தான் .இவர்கள் இல்லையென்றால் ஜனநாயகம் இல்லை என்ற அளவுக்கு இந்த தொழில் மிகவும் வலமாக நடைபெற்றுக்கொண்டு வருகிரது, வாழ்க கைதிகளின் சேவை வளர்க அவர்களது கொற்றம், வாழ்க ஜனநாயகம், வந்தே மாதரம்
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
09-மே-202109:12:52 IST Report Abuse
GMM 'சிறையில் கோரோணா அதிகரிப்பு. கைதிகளுக்கு பரோல்.' உச்ச நீதிமன்றம் உத்தரவு. போலி வக்கீல்கள் அதிகரிப்பை இது காட்டுகிறது. கோரோணா கைதி வெளிவந்தால் மக்களுக்கு நோய் பரவும். பழிவாங்க எண்ணம் தோன்றும். காவலர் மன அழுத்தம் உண்டாகும். முதியோர் இல்லம், குழந்தைகள் காப்பகம், (மன நோய்) மருத்துவ மனையில் மக்கள் நெருக்கம் இருக்கும். கோரோணா பரவும். அவர்கள் எங்கு செல்வார்கள்? உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X