சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருப்பதிக்கு 'அல்வா' கொடுத்த மதுரை ஆவின் அதிகாரிகள்!

Added : மே 09, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை : மதுரை ஆவின் முறைகேடுகள் தொடர்பாக நடந்த விசாரணையில், திருப்பதி கோவிலுக்கு அனுப்பப்பட்ட, 1.10 கோடி ரூபாய்க்கான நெய் விவர பதிவுகள் இல்லாதது தெரிய வந்துள்ளது. மதுரை ஆவினில், 2020 ஏப்ரல் முதல், 2021 மார்ச் வரை பால், நெய், வெண்ணெய் உற்பத்தியில், பல கோடி ரூபாய் முறைகேடு நடந்தது தொடர்பான புகார் அடிப்படையில், சென்னை ஆவின் அதிகாரி அலெக்ஸ் தலைமையில் விசாரணை நடந்தது.இதில், 13.71

மதுரை : மதுரை ஆவின் முறைகேடுகள் தொடர்பாக நடந்த விசாரணையில், திருப்பதி கோவிலுக்கு அனுப்பப்பட்ட, 1.10 கோடி ரூபாய்க்கான நெய் விவர பதிவுகள் இல்லாதது தெரிய வந்துள்ளது.

மதுரை ஆவினில், 2020 ஏப்ரல் முதல், 2021 மார்ச் வரை பால், நெய், வெண்ணெய் உற்பத்தியில், பல கோடி ரூபாய் முறைகேடு நடந்தது தொடர்பான புகார் அடிப்படையில், சென்னை ஆவின் அதிகாரி அலெக்ஸ் தலைமையில் விசாரணை நடந்தது.இதில், 13.71 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டு, உதவி பொது மேலாளர்கள் கிருஷ்ணன், சேகர் உட்பட, ஐந்து அதிகாரிகள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அப்போதைய, பொது மேலாளர் ஜனனி சவுந்தர்யாவிடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

சென்னை குழு விசாரணையில், உற்பத்தி மட்டுமின்றி, ஆவணங்களில் திருத்தம், 'இன்வாய்ஸ்'கள் மோசடி, தரக்கட்டுப்பாடு மோசடி என, பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி யுள்ளன.இது குறித்து ஆவின் அதிகாரிகள் கூறியதாவது:திருப்பதி லட்டு தயாரிக்கும் பணிக்கு, 2020 பிப்ரவரி, 4ம் தேதி, 7,500 கிலோ, பிப்., 15ல், 1,000 கிலோ நெய் அனுப்பி வைக்கப்பட்டது.இதன் மதிப்பு, ரூ. 1.10 கோடி. ஆனால், தணிக்கையில் இத்தகவல், 'மிஸ்சிங்'ஆக உள்ளது. திருப்பதி கோவில் பெயரில், 22.50 கிலோ நெய் அனுப்பி, அது வெளி மார்க்கெட்டில், கொள்ளை லாபத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதா என, விசாரணை நடக்கிறது.

அதுபோல, சென்னை ஆவினுக்கு மதுரையில் இருந்து, 6 டன் வெண்ணெய் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது சென்னை சென்று சேரவில்லை எனக் கண்டறியப்பட்டு உள்ளது. தவிர, 132 டன் வெண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறி மேலாளர் புகழேந்தி மீது, 2020 மார்ச்சில் குற்றம் சாட்டி அவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். மனமுடைந்த புகழேந்தி சில நாட்களில் தற்கொலை செய்தார்.அவரது இறப்பிற்கு பின், 132 டன் மதிப்பிலான நெய் கொள்ளளவு ஜார்கள், ஆவினில் பற்றாக்குறை ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சர்ச்சைக்குரிய, 132 டன் வெண்ணெய், நெய்யாக்கி ஜார்களில் வெளி மார்க்கெட்டிற்கு கடத்தப்பட்டிருக்கலாமா என, சந்தேகம் வலுத்துள்ளது. இதன் மதிப்பு, 5 கோடி ரூபாயாகும்.இதுபோன்ற பல நுாதன மோசடிகளை ஓராண்டில் அரங்கேற்றி, ஆவினுக்கு பல கோடிகள் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
m.viswanathan - chennai,இந்தியா
09-மே-202123:05:59 IST Report Abuse
m.viswanathan சுதந்திரத்திற்கு முன் வெள்ளையன் நம்மை சுரண்டியது போக , தற்போது அரசு அதிகாரி என்ற பெயரில் இவர்கள் , எவ்வளவு பணம் இருந்தால் நிறைவு அடைவீர்கள் , பாவிகளா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X