சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பீகாருக்கு அதிக பயணிகளுடன் சென்ற ஆம்னி பஸ் பறிமுதல்

Added : மே 09, 2021
Share
Advertisement
கோவை : பீகாருக்கு அதிக பயணிகளை அழைத்து செல்ல முயன்ற ஆம்னி பஸ் நேற்றிரவு பறிமுதல் செய்யப்பட்டன. கொரோனா தொற்று அதிகரித்துள்ளதையடுத்து, நாளை முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது.இதனால், கோவையில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். இந்நிலையில், நேற்றிரவு, குறிஞ்சி என்ற தனியார் ஆம்னி பஸ் அதிக பயணிகளை அழைத்துக்கொண்டு

கோவை : பீகாருக்கு அதிக பயணிகளை அழைத்து செல்ல முயன்ற ஆம்னி பஸ் நேற்றிரவு பறிமுதல் செய்யப்பட்டன.
கொரோனா தொற்று அதிகரித்துள்ளதையடுத்து, நாளை முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது.இதனால், கோவையில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். இந்நிலையில், நேற்றிரவு, குறிஞ்சி என்ற தனியார் ஆம்னி பஸ் அதிக பயணிகளை அழைத்துக்கொண்டு கோவை பாலசுந்தரம் ரோட்டில் சென்ற போது போக்குவரத்து அதிகாரிகள், அந்த பஸ்சை நிறுத்தி சோதனையிட்டனர்.பஸ்சில் 70க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் அமர்ந்திருந்தனர். அந்த பஸ் பீகாருக்கு புறப்பட்டு சென்றதும், தொழிலாளர்களிடம் தலா 4,000 ரூபாய் கட்டணம் வசூலித்ததும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டனர். பஸ் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X