பாக்., ஆதரவு கோஷம் பஞ்., தலைவர் கைது

Added : மே 09, 2021
Share
Advertisement
அமேதி : உத்தர பிரதேசத்தில், பாக்., ஆதரவு கோஷத்துடன் பேரணி நடத்திய, கிராம பஞ்சாயத்து தலைவர் உட்பட, ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்குள்ள அமேதி மாவட்டம் மாங்ரா கிராம பஞ்சாயத்து தலைவராக, சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், இம்ரான் கான் என்பவர் வெற்றி பெற்றார்.அவரும், அவரது ஆதரவாளர்கள்

அமேதி : உத்தர பிரதேசத்தில், பாக்., ஆதரவு கோஷத்துடன் பேரணி நடத்திய, கிராம பஞ்சாயத்து தலைவர் உட்பட, ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்குள்ள அமேதி மாவட்டம் மாங்ரா கிராம பஞ்சாயத்து தலைவராக, சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், இம்ரான் கான் என்பவர் வெற்றி பெற்றார்.அவரும், அவரது ஆதரவாளர்கள் சிலரும், வெற்றியை கொண்டாடும் வகையில், கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறி, பேரணி நடத்தினர்.அப்போது, 'இதோ இம்ரான் கான் வருகிறார், புதிய பாகிஸ்தானை தருகிறார்' என்ற பாடலை ஒலிபரப்பி உள்ளனர்.இந்த ஊர்வலத்தின், 'வீடியோ', சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதனால், பேரணி நடத்தியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து, தேச விரோத நடவடிக்கை மற்றும் கொரோனா விதிமீறல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், இம்ரான் கான் உட்பட ஆறு பேரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X