பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்சிஜன் சப்ளை செய்ய கேரள அரசு தடை

Added : மே 09, 2021
Share
Advertisement
சிவகங்கை : ஆக்சிஜன் சப்ளை செய்ய கேரள அரசு தடை விதித்ததால், தேனி, சிவகங்கை அரசு மருத்துவமனைகளில் விரைவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் 500 க்கும் மேற்பட்ட கொரோனா மற்றும் பிற நுரையீரல் பிரச்னை நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களுக்கு தினமும் 3,500 லிட்டர் ஆக்சிஜன் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக 10

சிவகங்கை : ஆக்சிஜன் சப்ளை செய்ய கேரள அரசு தடை விதித்ததால், தேனி, சிவகங்கை அரசு மருத்துவமனைகளில் விரைவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் 500 க்கும் மேற்பட்ட கொரோனா மற்றும் பிற நுரையீரல் பிரச்னை நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களுக்கு தினமும் 3,500 லிட்டர் ஆக்சிஜன் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள ஆக்சிஜன் சிலிண்டர் நிறுவி, வார்டுகளுக்கு சப்ளை செய்து வருகின்றனர். கொரோனா தொற்றில்லா காலத்தில் சிவகங்கை, தேனி அரசு மருத்துவமனைகளுக்கு கேரளாவில் இருந்து ஆக்சிஜன் சப்ளை செய்யப்பட்டது. வாரத்திற்கு ஒரு முறை 15 ஆயிரம் லிட்டர் டேங்கர் லாரியில் வரும் ஆக்சிஜனை தேனி, சிவகங்கைக்கு வழங்கினர்.

கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டுக்கு தேவை அதிகரித்துள்ளதால், சிவகங்கையில் வாரத்திற்கு 3 முறை கேரளாவில் இருந்து சப்ளை செய்தனர். இந்நிலையில் மே 9 க்கு பின் தமிழகத்திற்கு ஆக்சிஜன் சப்ளை செய்ய, கேரள அரசு தடை விதித்துள்ளது. இதனால், விரைவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.விரைவில் ஆக்சிஜன் வரும்சிவகங்கை கலெக்டர் மதுசூதன் ரெட்டி கூறியதாவது, இது மாநில அளவிலான பிரச்னை என்பதால், ஆக்சிஜன் தடையின்றி கிடைக்க, மாநில அளவிலான குழு, மத்திய அரசிடம் பேசி வருகின்றனர். இதற்காகவே 'வார் ரூம்' என்ற குழு நியமித்துள்ளனர். விரைவில் ஆக்சிஜன் சப்ளை செய்வார்கள், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X