மேற்கு வங்க வன்முறை ; தலைமை செயலருக்கு கவர்னர் 'சம்மன்'

Updated : மே 09, 2021 | Added : மே 09, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
கோல்கட்டா : மேற்கு வங்க வன்முறை தொடர்பாக நேரில் விளக்கம் அளிக்கும்படி, அம்மாநில தலைமை செயலருக்கு, கவர்னர், 'சம்மன்' அனுப்பி உள்ளார்.சமீபத்தில், மேற்கு வங்க சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில், ஆளும் கட்சியான, முதல்வர் மம்தா தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது. தேர்தல் முடிவுகளுக்கு பின் நடந்த பயங்கர வன்முறையில், பா.ஜ.,வைச்

கோல்கட்டா : மேற்கு வங்க வன்முறை தொடர்பாக நேரில் விளக்கம் அளிக்கும்படி, அம்மாநில தலைமை செயலருக்கு, கவர்னர், 'சம்மன்' அனுப்பி உள்ளார்.



latest tamil news



சமீபத்தில், மேற்கு வங்க சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில், ஆளும் கட்சியான, முதல்வர் மம்தா தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்தது. தேர்தல் முடிவுகளுக்கு பின் நடந்த பயங்கர வன்முறையில், பா.ஜ.,வைச் சேர்ந்த, 16 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், மேற்கு வங்க கவர்னர் ஜக்தீப் தன்கர் 'டுவிட்டரில்' கூறியிருப்பதாவது:மேற்கு வங்க வன்முறை தொடர்பாக, மாநில காவல் துறை தலைவர், கோல்கட்டா காவல் துறை ஆணையர் ஆகியோரின் அறிக்கைகளை, உள்துறை செயலர், எனக்கு அனுப்பவில்லை. மாநிலத்தில் மிகப் பயங்கரமான வன்முறை நிகழ்ந்துள்ளது. எனினும், அது குறித்த அறிக்கையை அரசமைப்பு தலைமைக்கு அனுப்பாதது, துரதிர்ஷ்டவசமானது. இதை இப்படியே விட்டு விட முடியாது. எனவே, இது தொடர்பாக, மாநில தலைமை செயலருக்கு நேரில் வந்து விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news



மேற்கு வங்க வன்முறை குறித்து விசாரிக்க, மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு குழுவை அனுப்பியிருந்தது. இக்குழு, நேற்று முன்தினம், கவர்னர் ஜக்தீப் தன்கரை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
09-மே-202117:45:21 IST Report Abuse
Endrum Indian இதில் என்ன அநியாயம்??? செய்வது அவளது பையன் அபிஷேக் துணையுடன் ஆகவே அது தவறே இல்லை???அதற்கு துணை போகின்றது இந்த ஊழல் திரிணாமுல் ஆதரவு அதிகாரிகள்???????என்ன முஸ்லீம் பேகம் மும்தாஜ் சரிதானே
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
09-மே-202116:42:26 IST Report Abuse
Lion Drsekar ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகள் அங்கு நடப்பதை வெளியுலகிற்கு காட்டாமல் இருப்பதால் பேகம் மற்றும் அவருக்கு துணைபோகும் சமூக விரோதிகள் செய்யும் அராஜக செயல்பாடுகளை வீடியோ எடுத்து அரசு காட்டலாமே நீதிமன்றம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது, வந்தே மாதரம்
Rate this:
Cancel
GMM - KA,இந்தியா
09-மே-202115:04:57 IST Report Abuse
GMM மேற்குவங்கம், டெல்லி, கேரளா, தமிழ்நாடு முதல்வர்கள் ஒப்பந்த முதல்வர்கள். தங்கள் கட்சிக்கு வாக்களித்தால் ஊழல், லஞ்சம், ஹவாலா, கடத்தல், சாதி ஒழிப்பு, மத மாற்றம், கலவரம்...மீது கடும் கட்டுப்பாடு இருக்கும் என்று சாதி, மத வாக்கு வங்கி அமைப்புகளிடம் உறுதி செய்து கொள்கை கூட்டணி அமைத்து இலவச உறுதி மொழி கொடுத்து தான் வேட்பு மனு தாக்கல் மற்றும் வெற்றி. மேற்பார்வை தேர்தல் ஆணையம். சட்ட சிக்கலை தீர்க்க வழக்கறிஞர்கள். ஒரு மாதம் கூட ஆக வில்லை. ஆளுநர் சம்மன் பயன் தராது. சீர்திருத்தம் அல்லது சீரழிவு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X