சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்றைய க்ரைம் ரவுண்ட்அப்

Updated : மே 09, 2021 | Added : மே 09, 2021
Share
Advertisement
தமிழக நிகழ்வுகள்1. போலீசிடமே 'கை' வைத்தவர் கைதுவடமதுரை : வடமதுரையில் போலீஸ் வாகனத்தை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.வடமதுரை ரயில்வே ஸ்டேஷன் அருகில் நேற்றுமுன்தினம் காவல்துறை ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட இருசக்கர வாகனம் நீண்ட நேரமாக கேட்பாரின்றி நின்றிருந்தது. விசாரணையில் வடமதுரை போலீசார் ரோந்து பணிக்காக பயன்படுத்திய பைக் என்றும், சமீபத்தில் திருடு போனதால் அதை

தமிழக நிகழ்வுகள்
1. போலீசிடமே 'கை' வைத்தவர் கைது
வடமதுரை : வடமதுரையில் போலீஸ் வாகனத்தை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வடமதுரை ரயில்வே ஸ்டேஷன் அருகில் நேற்றுமுன்தினம் காவல்துறை ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட இருசக்கர வாகனம் நீண்ட நேரமாக கேட்பாரின்றி நின்றிருந்தது. விசாரணையில் வடமதுரை போலீசார் ரோந்து பணிக்காக பயன்படுத்திய பைக் என்றும், சமீபத்தில் திருடு போனதால் அதை போலீசார் தேடி வந்ததும் தெரிந்தது.கண்காணிப்பு ிகமிரா பதிவுகளை ஆய்வு செய்ததில், வடமதுரை போலீஸ் நண்பர் குழுவில் பணியாற்றிய சூர்யா 22, என்பவரே திருடியது கண்டறியப்பட்டது. போலீசார் சூர்யாவை கைது செய்தனர்.latest tamil news2. இரட்டை கொலை வழக்கு 7 பேருக்கு 'குண்டாஸ்'
அரக்கோணம் : அரக்கோணம் இரட்டை கொலை வழக்கில், ஏழு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த சோகனுாரை சேர்ந்த அர்ஜுன், சூர்யா ஆகியோர், ஏப்ரல், 7ல் கொலை செய்யப்பட்டனர். இக்கொலை வழக்கில், 13 பேர் கைது செய்யப்பட்டனர். அதில், அரக்கோணம் ஒன்றிய அ.தி.மு.க., - ஐ.டி., பிரிவு செயலர் சத்யா, 25 மற்றும், 22 - 26 வயதுள்ள ஆறு பேர் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால், அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜூக்கு, எஸ்.பி., சிவக்குமார் பரிந்துரை செய்தார். அதன்படி, அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் உத்தரவிட்டார். போலீசார் அதற்கான நகலை அவர்களிடம்நேற்று வழங்கினர்.


latest tamil news3. நிதி நிறுவனத்தில் தீ வைக்க முயன்ற விவசாயி கைது
தஞ்சாவூர் : தனியார் நிதி நிறுவனத்தில், மண்ணெண்ணை ஊற்றி தீவைக்க முயன்றவரை, போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார் அடுத்த மணலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 42; விவசாயி. கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஆடுதுறையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், நகைகளை அடமானம் வைத்து, 2.10 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். நேற்று முன்தினம் மாலை, நகையை மீட்க கோபாலாகிருஷ்ணன், நிறுவனத்துக்கு சென்று உள்ளார். அங்கு, 40 ஆயிரம் ரூபாய் வட்டி கட்ட வேண்டும் என, கூறியுள்ளனர். ஆத்திரமடைந்தகோபாலகிருஷ்ணன், அதிக வட்டி வசூலிப்பதாக கூறி, நிறுவனத்தில் உள்ள பணியாளர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.


latest tamil news


Advertisement


மேலும், அவர் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை, பணியாளர்கள் மேல் ஊற்றி தீவைக்க முயன்றார். அதனால், பதட்டமடைந்த நிறுவன ஊழியர் மணிகண்டன், திருவிடைமருதுார் போலீசில் புகார் அளித்தார். போலீசார், கோபாலகிருஷ்ணனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

4. சிறுமிக்கு கட்டாய திருமணம்
கிருஷ்ணகிரி : சிறுமிக்கு கட்டாய திருமணம் நடத்தியது தொடர்பாக, தந்தை, மகனை, 'போக்சோ'வில் போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் ராஜா, 51. இவரது மனைவி கடந்தாண்டு இறந்து விட்டார்.அதே பகுதியில், ராஜாவின் தங்கை குடும்பத்தினர் வசிக்கின்றனர். ராஜா தங்கையின், 17 வயது மகள், தன் மாமா ராஜா வீட்டிற்கு வந்து சமையல் செய்து கொடுத்து வந்துள்ளார்.இந்நிலையில், ராஜாவின் மகன் ராம்கி, 21 பி.பி.ஏ., பட்டதாரி. தன் வீட்டிற்கு சமையல் செய்ய வந்த, அத்தை மகளிடம் ஆசை வார்த்தை கூறி, அத்துமீறிலில் ஈடுபட்டுள்ளார். திருமணம் செய்து கொள்வதாக கூறி கட்டாயப்படுத்தி, தகாத உறவில் ஈடுபட்டுள்ளார்.இதையறிந்த உறவினர்கள் சிறுமியை ராம்கிக்கு, ஜனவரி, 9ல் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

தனக்கு விருப்பமில்லாமல், திருமணம் செய்து வைத்ததாக, சிறுமி கடந்த, 7ல் கொடுத்த புகார்படி, சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் ராம்கி, அவரது தந்தை ராஜா ஆகியோரை கைது செய்தனர்.

5. நிலவிற்பனையில் ரூ.14.25 லட்சம் மோசடி : கணவன்,- மனைவி மீது வழக்குதேனி,: நாகலாபுரம் விவசாயி குருசாமியிடம் 57, நிலவிற்பனையில் ரூ.14.25 லட்சம் மோசடி செய்த சமதர்மபுரம் அண்ணாதெரு முருகேசன் 51,மனைவி மணிமொழி 46, மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


latest tamil newsகுருசாமியுடன் 10 பேர் குன்னுாரில் நிலம் வாங்கி வீடு கட்டி குடியிருக்க திட்டமிட்டனர். மணிமொழிக்கு சொந்தமான 3 ஏக்கர் நன்செய் நிலத்தை கிரையம் முடிக்க அனைவரின் பங்களிப்பாக தலா ரூ.3.50 லட்சம் வீதம் ரூ.40 லட்சம் சேர்த்து அவரிடம் வழங்கினர். பின் குருசாமி நண்பர் ராஜகோபால் என்பவர் பெயரில் கிரையம் முடித்தனர். அதன்பின், கணவர் - முருகேசன், மனைவி மணிமொழி நன்செய் நிலத்தை, வீட்டடி மனையாக மாற்ற பணம் தேவை எனக் கூறி குருசாமியிடம் ரூ.14.25 லட்சம் பெற்றனர். எந்த பணிகளும் செய்யவில்லை. கிரையம் முடித்து தர வேண்டிய 3 ஏக்கரில் ஒரு ஏக்கர் 50 செண்ட் நிலத்தை கணேசன் என்பவருக்கு மோசடியாக விற்பனை செய்தனர்.

இதுகுறித்து குருசாமி, முருகேசன், மணிமொழியிடம் கேட்டதற்கு முன்பணமாக பெற்ற ரூ.40 லட்சத்தை வழங்கினர். அதன்பின், ரூ.14.25 லட்சத்தை தராமல் இழுத்தடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். கணவன் - மனைவி மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடி, கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்தியாவில் குற்றம் :
பாக்., ஆதரவு கோஷம் பஞ்., தலைவர் கைது
அமேதி : உத்தர பிரதேசத்தில், பாக்., ஆதரவு கோஷத்துடன் பேரணி நடத்திய, கிராம பஞ்சாயத்து தலைவர் உட்பட, ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்குள்ள அமேதி மாவட்டம் மாங்ரா கிராம பஞ்சாயத்து தலைவராக, சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், இம்ரான் கான் என்பவர் வெற்றி பெற்றார்.அவரும், அவரது ஆதரவாளர்கள் சிலரும், வெற்றியை கொண்டாடும் வகையில், கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறி, பேரணி நடத்தினர்.அப்போது, 'இதோ இம்ரான் கான் வருகிறார், புதிய பாகிஸ்தானை தருகிறார்' என்ற பாடலை ஒலிபரப்பி உள்ளனர்.இந்த ஊர்வலத்தின், 'வீடியோ', சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.


latest tamil newsஇதனால், பேரணி நடத்தியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து, தேச விரோத நடவடிக்கை மற்றும் கொரோனா விதிமீறல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், இம்ரான் கான் உட்பட ஆறு பேரை கைது செய்தனர்.

உலக நடப்பு
குண்டு வெடிப்பு: 25 பேர் பலி
காபூல்: தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள ஒரு பள்ளிக்கு அருகே, நேற்று, பயங்கர குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. இதில், மாணவர்கள் உட்பட, 25 பேர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


latest tamil newsதகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர், காயமடைந்தோரை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில், பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு, இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X