பொது செய்தி

தமிழ்நாடு

மே.,11 முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்

Updated : மே 09, 2021 | Added : மே 09, 2021
Share
Advertisement
சென்னை : நாளை மறுநாள் முதல் மூன்று நாட்களுக்கு, தமிழக கடலோரம் மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில், வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:தென்தமிழகம் மற்றும் குமரிக்கடல், கேரளா பகுதியில், 1.5 கி.மீ., உயரம் வரை வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. அதனால், ஈரோடு,

சென்னை : நாளை மறுநாள் முதல் மூன்று நாட்களுக்கு, தமிழக கடலோரம் மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில், வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் அதிகரிக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:தென்தமிழகம் மற்றும் குமரிக்கடல், கேரளா பகுதியில், 1.5 கி.மீ., உயரம் வரை வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. அதனால், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்துார் மாவட்டங்கள், தெற்கு கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில், இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம். நாளை நீலகிரி மாவட்டத்தில், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். வடக்கு உள் மாவட்டங்களில், மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்களில், காற்றின் வெப்பநிலை உயர்ந்து காணப்படும்.


latest tamil news



வரும், 11 முதல், 13ம் தேதி வரை, மேற்கு வடமேற்கு திசையில் இருந்து, தரைக்காற்று வீச வாய்ப்புள்ளதால், தமிழக கடலோரம் மற்றும் அதையொட்டிய உள் மாவட்டங்களில் இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை உயரும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மதுக்கூரில், 6 செ.மீ., மழை பெய்து உள்ளது. தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக, கரூர் பரமத்தியில், 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X