அனுமதியற்ற டிஜிட்டல் விளம்பரங்கள் : அரசுக்கு பல ஆயிரம் கோடி இழப்பு: அள்ளித்தட்டும் பினாமி நிறுவனங்கள்| Dinamalar

அனுமதியற்ற டிஜிட்டல் விளம்பரங்கள் : அரசுக்கு பல ஆயிரம் கோடி இழப்பு: அள்ளித்தட்டும் பினாமி நிறுவனங்கள்

Updated : மே 09, 2021 | Added : மே 09, 2021 | கருத்துகள் (23) | |
தமிழகம் முழுவதும் அரசு இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் விளம்பரங்களால், அரசுக்கு வரவேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய், பினாமி நிறுவனங்களுக்குச் செல்வதைத் தடுக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.கடந்த 2018 பிப்., 26ம் தேதி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட ஓர் அறிக்கையில், 'சென்னையில் பஸ் நிறுத்த நிழற்குடை விளம்பரங்கள் அனைத்தையும்

தமிழகம் முழுவதும் அரசு இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் விளம்பரங்களால், அரசுக்கு வரவேண்டிய பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய், பினாமி நிறுவனங்களுக்குச் செல்வதைத் தடுக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.latest tamil newsகடந்த 2018 பிப்., 26ம் தேதி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட ஓர் அறிக்கையில், 'சென்னையில் பஸ் நிறுத்த நிழற்குடை விளம்பரங்கள் அனைத்தையும் குறிப்பிட்ட மூன்று நிறுவனங்கள் மட்டுமே செய்து வருகின்றன. இவை அனைத்தும் உள்ளாட்சித்துறை அமைச்சரின் பினாமி நிறுவனங்கள் என்றுகூறப்படுகிறது.தனியார் இடங்களில் விளம்பரப் பலகைகள் அமைக்க உரிமம் வழங்கப்பட்டிருந்தால் மூன்றாண்டுகளில், 3,750 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருக்கும். மாறாக, நிழற்குடை விளம்பரங்களால் தமிழக அரசுக்கு சில லட்சங்கள் கூட வருவாய் கிடைப்பதில்லை. அரசுக்கு கடந்த மூன்றாண்டுகளில், 3,750 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும்' என்று கூறியிருந்தார்.


latest tamil newsமூன்று நிறுவனங்களும், 2015 பிப்., - மார்ச் மாதங்களில், 10 நாட்கள் இடைவெளியில் பதிவு செய்யப்பட்டதையும், மூன்று நிறுவனங்களுக்கும் ஒரு நபரேஇயக்குனராக இருப்பதையும் கூட அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால், என்ன நடந்ததென்று தெரிய வில்லை. அப்படியொரு விசாரணையும்நடக்கவில்லை. அதற்குப் பின் ராமதாசும் அதைப் பற்றிப் பேசவேயில்லை. மற்ற எதிர்கட்சிகளும் கூட அதைக் கண்டுகொள்ளவே இல்லை.


கோவையில் உச்சம்


சென்னையில் துவங்கிய அந்த டிஜிட்டல் விளம்பர வியாபாரம், கோவை, மதுரை என வேறு பல நகரங்களுக்கும் விரிவடைந்தது. இப்போது கோவை நகரில் இந்த விளம்பர விதிமீறல் உச்சம் தொட்டிருக்கிறது. கடந்த நான்காண்டுகளில், கோவையில் எக்கச்சக்கமான டிஜிட்டல் விளம்பரப் பலகைகள் அனுமதியின்றியும், விதிகளை மீறியும் வைக்கப்பட்டுள்ளன. விளம்பரங்கள் வைப்ப தற்காகவே, மக்கள் நடமாட்டமுள்ள சில இடங்களில் தேவையின்றியும், அனுமதி இல்லா மலும் பயணிகள் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன.மத்திய அரசின் துாய்மை பாரதம் திட்ட நிதியில் புனரமைக்கப்பட்ட மாநகராட்சி சுகாதார வளாகங்களிலும், மிகப்பிரமாண்டமான, 'டிஜிட்டல் டிஸ்பிளே' விளம்பரங்கள் வைக்கப்பட்டு, ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருவாய் பார்க்கப்படுகிறது.

இதற்கு அனுமதித்ததன் வாயிலாக கழிப்பிடங்கள் பராமரிக்கப்படுவதாக, காரணம் கூறி வந்தது கோவை மாநகராட்சி. அதேபோன்று, கோவை நகருக்குள் பரபரப்பான போக்குவரத்து நிலவும், 100 அடி ரோடு,கிராஸ்கட் ரோடு, டி.பி., ரோடு, பெரிய கடை வீதி, ராஜவீதி, ஒப்பணக் காரவீதி என பல்வேறு பகுதிகளிலும் பலநுாறு டிஜிட்டல் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான விளம்பரங்கள், கடந்த மார்ச் மாதத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப் பட்ட பின் பொருத்தப்பட்டவை.

இந்திய சாலைக்குழும விதிகளின் படியும், ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகளின் அடிப்படையிலும் இத்தகைய விளம்பரங்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி தரவே முடியாது. ஆனால் அப்போதிருந்த ஆளும்கட்சியினரின் பினாமி நிறுவனங்களே இந்த விளம்பரங்கள் அனைத்தையும் நிறுவியிருப்பதால், எந்த அதிகாரியுமே இவற்றைக் கண்டுகொள்ளவில்லை. அரசுக்கு வருவாய் இல்லைதமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விளம்பரப் பலகைள் மற்றும் வரி விதிப்புச் சட்டம் 2003 ன் படி, வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளின் கவனத்தை ஈர்க்கும் எந்த விளம்பரமாக இருந்தாலும் அதற்கு மாவட்ட கலெக்டரிடம் உரிமம் பெற வேண்டும். ஆனால் கோவையில் எந்தவொரு விளம்பரத்துக்கும் அப்படி அனுமதி தரப்பட வில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், கடந்த ஆண்டில் பதில் தரப்பட்டது. அதற்குப் பின் நுாற்றுக்கணக்கான டிஜிட்டல் விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

தேசிய, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் யாரும் அந்தத் துறைகளுக்குச் சொந்தமான ரோடுகளில் இவற்றை வைக்க தடையின்மைச் சான்று தரவேயில்லை. அதனால் மாநகராட்சி ரோடுகளிலும், நடைபாதைகளிலும், மயானங்களிலும், பள்ளி வளாகங்களிலும் இவை இஷ்டம்போல நிறுவப்பட்டுள்ளன. இந்த விளம்பரங்களால் மாநகராட்சிக்கோ, அரசுக்கோ பெரிதாக எந்த வருவாயும் இல்லை.ஆனால் பினாமி நிறுவனங்கள் ஆண்டுக்கு, பல நுாறு கோடி ரூபாய் வருவாய் பார்ப்பதும், பல அதிகாரிகளுக்கு பங்கு போவதும் தெரிகிறது.சென்னை, கோவை உட்பட தமிழகத்தின் பெருநகரங்களில், இதுபோன்று அனுமதியின்றியும், விதிகளை மீறியும் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் விளம்பரங்களில் பெரும்ஊழல் நடந்திருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

இதுபற்றி விசாரணை நடத்துவதோடு, இவற்றை உடனே அகற்றிவிட்டு, பயணிகள் நிழற் குடை, டிஜிட்டல் விளம்பரங்களை வரன்முறைப்படுத்தினாலே, அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.பெரும் நிதி நெருக்கடியில் பொறுப்பேற்று உள்ள புதிய அரசு உடனே இதைச் செய்யுமென்று நம்புவோம்.


latest tamil news

'கோப்பு பார்க்கணும்!'


கோவை மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியனிடம் கருத்துக் கேட்க முயன்றபோது, அவரிடம் பதில் பெறவே முடியவில்லை. தற்போதுள்ள கலெக்டர் நாகராஜன், தேர்தல் பணிக்காக, மே10 வரை மட்டுமே இங்கு பணி செய்வதற்காக, கடந்த மார்ச் இறுதியில் தேர்தல்கமிஷனால் மாற்றப்பட்டவர்.அவரிடம் கேட்டதற்கு ''நான் மார்ச் 25 அன்றுதான் இங்கு பணிக்கு வந்தேன்.

வந்ததிலிருந்து தேர்தல் பணி. இப்போது கொரோனா தடுப்புப் பணியில், தீவிர கவனம் செலுத்த வேண்டியுள்ளது. எந்த விபரமாக இருந்தாலும் இதற்குப்பொறுப்பான பி.ஏ.,விடம் கேட்டுக்கொள்ளுங்கள்'' என்றார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்து ராமலிங்கத்திடம் கேட்டதற்கு, ''கோப்புகளைப் பார்த்துத்தான் சொல்ல முடியும். இரண்டு நாட்களாகும்,'' என்றார்.
-நமது சிறப்பு நிருபர்-

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X