பெற்றோரை கொலை செய்த சிறுவன் போலி ஜோதிடர் பேச்சை கேட்டு 'பகீர்'

Added : மே 09, 2021
Share
Advertisement
பெங்களூரு; 'உனக்கு பித்ரு தோஷம் உள்ளது. தந்தை இறந்தால் மட்டுமே, நீ நன்றாக இருப்பாய்' என, போலி ஜோதிடர் கூறியதை நம்பி, தாய், தந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரு புறநகர், பீன்யா அருகிலுள்ள, கரிஹோபனஹள்ளி, பிருந்தாவன் நகரில், புள்ளியல் துறை அலுவலகம் உள்ளது.இதில் ஹனுமந்தராயா, 41, செக்யூரிட்டியாக பணியாற்றினார். இவரது மனைவி ஹொன்னம்மா, 34, இதே

பெங்களூரு; 'உனக்கு பித்ரு தோஷம் உள்ளது. தந்தை இறந்தால் மட்டுமே, நீ நன்றாக இருப்பாய்' என, போலி ஜோதிடர் கூறியதை நம்பி, தாய், தந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரு புறநகர், பீன்யா அருகிலுள்ள, கரிஹோபனஹள்ளி, பிருந்தாவன் நகரில், புள்ளியல் துறை அலுவலகம் உள்ளது.இதில் ஹனுமந்தராயா, 41, செக்யூரிட்டியாக பணியாற்றினார். இவரது மனைவி ஹொன்னம்மா, 34, இதே அலுவலகத்தில், துப்புரவு தொழிலாளியாக பணியாற்றினார்.இத்தம்பதியர், மூன்று நாட்களுக்கு முன், அலுவலக கழிப்பறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.பீன்யா போலீசார் நடத்திய விசாரணையில், தம்பதியரை கொலை செய்தது, அவர்களின், 14 வயது மகன் என்பது தெரிந்தது.கஞ்சா பழக்கத்துக்கு ஆளான மகன், ஜோதிடர் ஒருவரை சந்தித்து, தன் எதிர்காலம் பற்றி கேட்டார். அவர், 'உனக்கு பித்ரு தோஷம் உள்ளது.நீ நன்றாக வாழ வேண்டுமென்றால், உன் தந்தை இறக்க வேண்டும்,' என்றார்.இதை நம்பிய சிறுவன், தந்தையை கொலை செய்ய திட்டமிட்டார். சம்பவத்தன்று அதிகாலை, கஞ்சா போதையில், தந்தையின் தலை மீது கல்லை போட்டு கொலை செய்தார்.இதை தடுக்க வந்த தாயையும் கொலை செய்தார். உடல்களை கழிப்பறையில் போட்டு பூட்டி, சாவியை பேன்ட் பாக்கெட்டில் ஒளித்து வைத்துக்கொண்டது, விசாரணையில் தெரிந்தது.சிறுவனை கைது செய்து, சீர் திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர். இவர் கொடுத்த தகவலின் படி, ஜோதிடர் கைது செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X