அழுகிய காய்கறிகள், பழங்கள் விவசாயிகள் நிலை பரிதாபம்

Added : மே 09, 2021
Share
Advertisement
பெங்களூரு; விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைவித்த காய்கறிகள், பழங்கள், பூக்கள் கேட்பாரின்றி, அழுகி பாழாகிறது. கொரோனா தொற்று, விவசாயிகள் வயிற்றில் மண்ணை போட்டுள்ளது.கர்நாடகா முழுவதும், கொரோனா தொற்று பரவியுள்ளது. இதை கட்டுப்படுத்த, பொது முடக்கம் அமலில் உள்ளது.அத்தியாவசிய பொருட்கள் என கருதப்படும் காய்கறிகள், பழங்கள், பூக்களை விற்பனைக்கு கொண்டு செல்ல, வாகன

பெங்களூரு; விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைவித்த காய்கறிகள், பழங்கள், பூக்கள் கேட்பாரின்றி, அழுகி பாழாகிறது. கொரோனா தொற்று, விவசாயிகள் வயிற்றில் மண்ணை போட்டுள்ளது.கர்நாடகா முழுவதும், கொரோனா தொற்று பரவியுள்ளது. இதை கட்டுப்படுத்த, பொது முடக்கம் அமலில் உள்ளது.அத்தியாவசிய பொருட்கள் என கருதப்படும் காய்கறிகள், பழங்கள், பூக்களை விற்பனைக்கு கொண்டு செல்ல, வாகன வசதியில்லை.மார்க்கெட்டுக்கு கொண்டு சென்றாலும், வாங்குவோர் இல்லை. வாங்கினாலும் நியாயமான விலை கிடைப்பதில்லை.நிலத்தில் அறுவடை செய்யவும், கூலியாட்கள் கிடைக்கவில்லை. இதனால் விளைச்சல்கள் நிலத்திலேயே பாழாகிறது.கொரோனா குறைந்ததாக கருதி, விவசாயிகள் பலரும், லட்சக்கணக்கான ரூபாய் கடன் வாங்கி, காய்கறிகள், பழங்கள், பூக்கள் பயிரிட்டனர்.கூலியாட்கள் பிரச்னை, தண்ணீர் பற்றாக்குறை, மின்சார தட்டுப்பாடு பிரச்னை, உரம், விதைப்பொருட்கள் விலை உயர்வு என, பல்வேறு பிரச்னைகளுக்கிடையே, விவசாயிகள் பயிர்களை விளைவித்தனர். ஆனால் பலனில்லை.ராம்நகர் அருகில் பயிரிடப்பட்ட தக்காளிக்கு, நியாயமான விலை கிடைக்காததால், இரண்டு, மூன்று மார்க்கெட்டுகளுக்கு அலைந்தும், வாங்குவோர் இல்லை.மனம் நொந்த விவசாயிகள், தக்காளியை சாலையில் கொட்டிவிட்டு சென்றனர்.சில விவசாயிகள், விளைச்சலை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்ல, வாகன வசதியின்றி, விளைச்சலை அறுவடை செய்ய கூலியாட்கள் கிடைக்காமல், விளைச்சலை, மாடுகளை விட்டு மேய விடுகின்றனர்.காய்கறிகளை பல நாட்கள் சேகரித்து வைக்க முடியாது. செடியிலேயே விட்டு வைக்க முடியாது.பூ வாங்குவோர் இல்லை. கோவில்களும் மூடப்பட்டுள்ளது. திருமணம் உட்பட, மற்ற நிகழ்ச்சிகளும் எளிமையாக நடக்கின்றன.இதனால் பூக்களும் விற்பனையாவதில்லை. விவசாயிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X