அரசியல் செய்தி

தமிழ்நாடு

மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை : ஓ.பி.எஸ்., வேண்டுகோள்

Added : மே 09, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை : 'மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற பணியாளர்களின் சேவையை கவுரவிக்கும் வகையில், ஒவ்வொரு மாதமும், அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை:கொரோனா இரண்டாவது அலை, தீவிரமாக பரவி வரும் சூழலில், முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பது, நோய் தொற்று பரவலின் தீவிரத்தை கட்டுப்படுத்த,
 மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை :  ஓ.பி.எஸ்., வேண்டுகோள்

சென்னை : 'மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற பணியாளர்களின் சேவையை கவுரவிக்கும் வகையில், ஒவ்வொரு மாதமும், அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:கொரோனா இரண்டாவது அலை, தீவிரமாக பரவி வரும் சூழலில், முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பது, நோய் தொற்று பரவலின் தீவிரத்தை கட்டுப்படுத்த, பேருதவியாக இருக்கும்.எளியோரின் பசி தீர்க்கும் அம்மா உணவகங்கள், ஊரடங்கு காலத்தில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டதையும், 'டாஸ்மாக்' கடைகள் மூடப்பட்டதையும் வரவேற்கிறேன்.'மினி கிளினிக்'குகளின் எண்ணிக்கையையும், அதில் தற்காலிக மருத்துவர் களின் நியமனத்தையும் அதிகரித்து, 24 மணி நேரமும் இயங்கச் செய்தால், பெரிய அரசு மருத்துவமனைகளில், கூட்டம் குறையும்; நோயாளிகளின் சிரமம் களையப்படும்.

கடந்த ஓராண்டுக்கு மேலாக, தொடர்ந்து கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்து வரும், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற பணியாளர்களின் சேவையை, கவுரவிக்கும் வகையில், அரசு ஒவ்வொரு மாதமும், ஊக்கத்தொகை வழங்க வேண்டும். இவ்வாறு ஓ.பி.எஸ்., கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh kumar - Salmiyah,குவைத்
09-மே-202121:30:26 IST Report Abuse
suresh kumar கடந்த ஓராண்டில், நீங்கள் பதவியிலிருந்தபோது தந்தீர்களா? அப்படியென்றால் அதை சுட்டிக்காட்டி அதுபோல் அல்லது அதைவிட அதிகமாக தேர்ச்சி சொல்லலாமே நீங்கள் தந்திருக்கவில்லையென்றால், இப்பொழுது கேட்க தகுதியில்லை.
Rate this:
Cancel
kamal basha - sudugadu,இந்தியா
09-மே-202119:47:45 IST Report Abuse
kamal basha ops avergaley neega solum alverku stalin illai ok va yallam nadakum nega unga katchi ya pathukonga bathirama????
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
09-மே-202111:08:39 IST Report Abuse
oce உங்கள் இருவரிடமிருந்த கோணிப்பையில் கல்லை கட்டி அடித்த போட்டியே அதிமுக தோற்க காரணம். இரு கத்தியை ஒரே உரையில் செருகுவது தவறல்லவா.நாடெங்கும் அதிமுக பஞ்சாயத்து கூட்டங்களை அடிக்கடி நடத்தி முட்டாள் மக்கள் மனதில் இடம் பிடிக்கப் பாருங்கள்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X