சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தம்பியை கொலை செய்ய முயன்ற அண்ணன் மகன் உட்பட 4 பேர் கைது

Added : மே 09, 2021
Share
Advertisement
தஞ்சாவூர் : தஞ்சை அருகே முன்விரோதம் காரணமாக கூலிப்படையினரை வைத்து தம்பியை கொலை செய்ய முயன்ற அண்ணன் மகன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே வெள்ளை தேவன் விடுதியை சேர்ந்தவர் பெருமாள் 55. இவருக்கும் இவரது அண்ணன் சுப்பையன் என்பவருக்கும் இடப்பிரச்னை இருந்துள்ளது.நேற்று முன்தினம் ஊரணிபுரத்தில் இருந்து சொந்த ஊருக்கு பெருமாள்

தஞ்சாவூர் : தஞ்சை அருகே முன்விரோதம் காரணமாக கூலிப்படையினரை வைத்து தம்பியை கொலை செய்ய முயன்ற அண்ணன் மகன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே வெள்ளை தேவன் விடுதியை சேர்ந்தவர் பெருமாள் 55. இவருக்கும் இவரது அண்ணன் சுப்பையன் என்பவருக்கும் இடப்பிரச்னை இருந்துள்ளது.நேற்று முன்தினம் ஊரணிபுரத்தில் இருந்து சொந்த ஊருக்கு பெருமாள் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள் அரிவாள் இரும்பு கம்பி உருட்டுக் கட்டைகளால் சரமாரியாக தாக்கினர்.

போலீசார் நடத்திய விசாரணையில் முன் விரோதம் காரணமாக பெருமாளின் அண்ணன் சுப்பையன் அவரது மகன் அர்க்மேடிஸ் 28, ராங்கிபட்டையை சேர்ந்த மணிகண்டன் 21, வேம்பு அரசன்24, கறம்பக்குடியை சேர்ந்த அஜய்19 ஆகியோர் பெருமாளை தாக்கியது தெரிய வந்தது. இதையடுத்து அர்க்மேடிஸ், மணிகண்டன், அஜய், வேம்பு அரசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான சுப்பையனை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X