சாலைகளில் நடமாடினால் கைது

Added : மே 09, 2021
Share
Advertisement
பெங்களூரு; ''கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, முழுமையான பொது முடக்கம் அமலுக்கு வருகிறது. சாலைகளில் மக்கள் நடமாடினால், கைது செய்யப்படுவர்,'' என பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த் எச்சரித்தார்.பெங்களூரில் அவர், நேற்று கூறியதாவது:கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, மாநில அரசு கடும் விதிமுறைகளை, அமல்படுத்தியுள்ளது. மே 10 முதல் முழுமையான பொது முடக்கம், அமலுக்கு வருகிறது. பொது

பெங்களூரு; ''கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, முழுமையான பொது முடக்கம் அமலுக்கு வருகிறது. சாலைகளில் மக்கள் நடமாடினால், கைது செய்யப்படுவர்,'' என பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த் எச்சரித்தார்.பெங்களூரில் அவர், நேற்று கூறியதாவது:கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, மாநில அரசு கடும் விதிமுறைகளை, அமல்படுத்தியுள்ளது. மே 10 முதல் முழுமையான பொது முடக்கம், அமலுக்கு வருகிறது. பொது மக்கள் தேவையின்றி, வெளியே நடமாடக்கூடாது.அத்தியாவசிய பொருட்களை வாங்க, காலை 6:00 மணி முதல், 10:00 மணிவரை அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 10:00 மணிக்கு பின், யாரும் வீட்டிலிருந்து வெளியே வரக்கூடாது.ஒருவேளை நடமாடினால், சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும். தேவையின்றி சாலைகளில் செல்லும் வாகனங்கள், பறிமுதல் செய்யப்படும்.கொரோனா விதிமுறைகளை மீறுவோர் கைது செய்யப்படுவர். மருந்துகள், அவசர தேவையை தவிர, மற்ற எந்த பணிகளுக்கும், வெளியே வரக்கூடாது. பெங்களூரு நகர் முழுவதும், போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X