திறமையற்ற பஞ்சாப் அரசு ; சித்து கடும் விமர்சனம்

Updated : மே 09, 2021 | Added : மே 09, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
சண்டிகர் : “திறமை இல்லாத காரணத்தால், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏற்கவேண்டிய நிலை, மாநில அரசுக்கு ஏற்பட்டுள்ளது,” என, பஞ்சாப் அரசை, காங்., - எம்.எல்.ஏ., நவ்ஜோத் சிங் சித்து விமர்சித்துள்ளார். பஞ்சாபில், கடந்த, 2015ம் ஆண்டு, சீக்கியர்களின் புனித நுால் கிழித்தெறியப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோட்காபூரா பகுதியில், சீக்கிய மதத்தினர் போராட்டம் நடத்தினர்.

சண்டிகர் : “திறமை இல்லாத காரணத்தால், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏற்கவேண்டிய நிலை, மாநில அரசுக்கு ஏற்பட்டுள்ளது,” என, பஞ்சாப் அரசை, காங்., - எம்.எல்.ஏ., நவ்ஜோத் சிங் சித்து விமர்சித்துள்ளார்.



latest tamil news



பஞ்சாபில், கடந்த, 2015ம் ஆண்டு, சீக்கியர்களின் புனித நுால் கிழித்தெறியப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோட்காபூரா பகுதியில், சீக்கிய மதத்தினர் போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், இரண்டு பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். இதுகுறித்து, அப்போதைய ஐ.பி.எஸ்., அதிகாரி குன்வர் விஜய் பிரதாப் சிங் தலைமையிலான சிறப்பு புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தினர். எனினும், அதிகாரி விஜய் பிரதாப் சிங்கின் விசாரணை மீது அதிருப்தி தெரிவித்த பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம், அவர் சமர்ப்பித்த விசாரணை அறிக்கையை ரத்து செய்து, கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தது.


latest tamil news



மேலும், இதில் மீண்டும் விசாரணை நடத்த புதிய குழுவை அமைக்க, மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.நீதிமன்ற உத்தரவை ஏற்று, சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து, மாநில அரசு, நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டது. விசாரணை நடத்தி முடிக்க, ஆறு மாத கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்து, சீக்கிய மதத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு, காங்., - எம்.எல்.ஏ., நவ்ஜோத் சிங் சித்து, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


latest tamil news



தன் சொந்த அரசையே விமர்சித்து, சித்து கூறுகையில்,“திறமை இல்லாத காரணத்தால், மாநில அரசுக்கு, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஏற்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது,” என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
09-மே-202122:00:16 IST Report Abuse
bal இவன் ஒரு பைத்தியம்...இவனுக்கு முதல்வர் பதவி வேண்டி பிஜேபியிலிருந்து காங்கிரஸுக்கு போனான்..கோமாளி.
Rate this:
Cancel
Kannan rajagopalan - Chennai,இந்தியா
09-மே-202120:18:26 IST Report Abuse
Kannan rajagopalan இவன் கொலைகார கேஸை திருப்பி எடுக்கணும். ஏதோ கிரிக்கெட் ஆடறான்னு மூடிட்டாங்க ....
Rate this:
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
09-மே-202120:16:13 IST Report Abuse
அம்பி ஐயர் அதாவது.... திறமையில்லாத காரணத்தினால்.... உயர் நீதி மன்றத்தின் உத்தரவை ஏற்க வேண்டிய நிலை...... அவர் என்ன சொல்ல வருகிறார்.....?? பஞ்சாப் அரசு திறமையாக (பொய்யாக) உயர் நீதிமன்றம் ஏற்கும் வகையில் விசாரணை அறிக்கை இல்லை எனச் சொல்கிறார்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X