பாக்.,கில் சாதித்த ஹிந்து பெண்

Updated : மே 09, 2021 | Added : மே 09, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
இஸ்லாமாபாத், : பாகிஸ்தானில் கவுரவமிக்க, சி.எஸ்.எஸ்., எனப்படும், சென்ட்ரல் சுபீரியர் சர்வீஸ் தேர்வில், முதல் முறையாக, ஹிந்து பெண் ஒருவர் தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளார்.பி.ஏ.எஸ்., எனப்படும், பாகிஸ்தான் ஆட்சிப்பணிக்கான அதிகாரிகள், சி.எஸ்.எஸ்., தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுகின்றனர். சி.எஸ்.எஸ்., - 2020 தேர்வை, 18 ஆயிரத்து, 553 பேர் எழுதினர். இதில், 221 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இஸ்லாமாபாத், : பாகிஸ்தானில் கவுரவமிக்க, சி.எஸ்.எஸ்., எனப்படும், சென்ட்ரல் சுபீரியர் சர்வீஸ் தேர்வில், முதல் முறையாக, ஹிந்து பெண் ஒருவர் தேர்ச்சி பெற்று, சாதனை படைத்துள்ளார்.



latest tamil news



பி.ஏ.எஸ்., எனப்படும், பாகிஸ்தான் ஆட்சிப்பணிக்கான அதிகாரிகள், சி.எஸ்.எஸ்., தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்படுகின்றனர். சி.எஸ்.எஸ்., - 2020 தேர்வை, 18 ஆயிரத்து, 553 பேர் எழுதினர். இதில், 221 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்றவர்களில், சிந்து மாகாணம், ஷிகார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹிந்து பெண்ணான சனா ராமாசந்தும் ஒருவர். இதையடுத்து, இவர், பி.ஏ.எஸ்., பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


latest tamil news



இது பற்றி, சனா கூறுகையில், ''இந்த பெருமை முழுதும், என் பெற்றோரையே சாரும்,'' என்றார். பாகிஸ்தானில், சி.எஸ்.எஸ்., தேர்வில் வெற்றி பெற்ற, முதல் ஹிந்து பெண் என்ற பெருமை, சனாவுக்கு கிடைத்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr.T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
09-மே-202118:10:10 IST Report Abuse
Dr.T.Senthilsigamani வாழ்த்துக்கள் சகோதரி
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
09-மே-202117:22:58 IST Report Abuse
Rasheel பல நூறு ஆண்டு காட்டுமிராண்டித்தனம் மதம் என்ற பெயரில் அந்த நாட்டில் குடியேறியிருக்கிறது. மற்ற நாடுகள் எல்லாம் பொருட்களை ஏற்றுமதி செய்வது போல அவன் தீவிரவாதிகளை ஏற்றுமதி செய்கிறான். இந்த பெண் ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஹிந்து பெண்களில் ஒரு சாம்பிள் தான். மற்றவர் எல்லாம் மிகவும் ஏழ்மை நிலையில்.
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
09-மே-202117:00:38 IST Report Abuse
vnatarajan இது ஒரு பாராட்டு செய்தியாக இருந்தாலும் அந்த பெண்ணின் எதிர்கால வாழ்க்கையைப்பற்றி கவலைப்படாமல் இருக்கமுடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X