கொரோனாவிடம் இருந்து தப்பிக்க கோமியம்: பா.ஜ., எம்.எல்.ஏ., பேச்சு

Updated : மே 09, 2021 | Added : மே 09, 2021 | கருத்துகள் (39)
Share
Advertisement
லக்னோ: பசுவின் கோமியத்தை குடித்தால் கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம் என பா.ஜ., எம்எல்ஏ கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனை தடுக்க, ஆராய்ச்சியாளர்கள் பல தடுப்பூசிகளை கண்டறிந்துள்ளனர். இந்தியாவில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது.
UP, BJP_MLA, CowUrine, Recommends, StopCorona, உத்தரபிரதேசம், பாஜக, எம்எல்ஏ, பசு, கோமியம், கொரோனா

லக்னோ: பசுவின் கோமியத்தை குடித்தால் கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம் என பா.ஜ., எம்எல்ஏ கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனை தடுக்க, ஆராய்ச்சியாளர்கள் பல தடுப்பூசிகளை கண்டறிந்துள்ளனர். இந்தியாவில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில், பா.ஜ., எம்எல்ஏ ஒருவர், பசுவின் கோமியத்தை தண்ணீரில் கலந்து குடித்தால் கொரோனாவிலிருந்து தப்பிக்க முடியும் என கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உ.பி.,யில் உள்ள பாலியா மாவட்டம் பெய்ரியா தொகுதி எம்.எல்.ஏ.,வான சுரேந்திர சிங், இது தொடர்பாக வெளியிட்ட வீடியோவில், ஒரு கிளாசில் தண்ணீர் வைத்துக்கொண்டு, அதில் பசுவின் கோமியத்தை கலந்து, குடிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.


latest tamil news



அந்த வீடியோவில் அவர் பேசியதாவது: பசுவின் கோமியத்தை தண்ணீரில் கலந்து காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். அடுத்த அரை மணிநேரத்துக்கு ஏதும் சாப்பிடக்கூடாது. இவ்வாறு குடித்தால் கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம். என்னுடைய ஆரோக்கியமான உடல்நிலைக்கும் இதுதான் காரணம், மக்களுக்காக 18 மணிநேரம் தன்னால் உழைக்க முடிகிறது. எந்த விதமான நோய்க்கும் பசுவின் கோமியம் மருந்தாகும், குறிப்பாக இதய நோய்களுக்கு பசுவின் கோமியம் சிறப்பாக வேலை செய்யும். இவ்வாறு அவர் பேசியிருந்தார். பா.ஜ., எம்எல்ஏ.,வின் இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
10-மே-202108:15:20 IST Report Abuse
தல புராணம் விவேக் காமெடியில, ஆட்டோ கண்ணாடியை திருப்பி வெச்சா ஆட்டோ ஸ்டார்ட் ஆகும்.. அப்படி தான்.. இந்த சனாதன விஞ்ஞானிங்க..
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
10-மே-202108:12:41 IST Report Abuse
தல புராணம் காலங்காத்தால சரி, வெறும் வயித்தில சரி, அப்புறம் இதை நீ பல்லு வெளக்கிட்டு குடிப்பியா, இல்லை ஊத்த வாயிலேயே குடிப்பியா சொல்லு. அதையும் சேர்ந்து ஆராய்ச்சி பண்ணலாம்.. ரிசல்ட்டு வந்தா ஒனக்கு கிரெடிட்டு..
Rate this:
Cancel
Raja - Trichy,இந்தியா
10-மே-202101:40:03 IST Report Abuse
Raja I feel sorry for the people of UP. நம்பிக்கை வேறு, எதார்த்தம் வேறு. அறிவியல் ஆதாரம் இல்லாத நம்பிக்கையை ஒரு MLA கூறுவது வேடிக்கையாய் இருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X