பொது செய்தி

தமிழ்நாடு

நகைக்கடன் தள்ளுபடி 5 சவரனா, 6 சவரனா?

Updated : மே 09, 2021 | Added : மே 09, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை : ஆட்சி மாற்றத்தால், கூட்டுறவு வங்கிகளில், 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுமா அல்லது 6 சவரன் வரையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.தமிழக அரசின், கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், மாநில தலைமை கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், தங்க நகைகளை அடமானம் வைத்து, பலரும் கடன் வாங்குகின்றனர். சட்டசபை
நகைக்கடன், தள்ளுபடி, கூட்டுறவு வங்கி, முதல்வர், ஸ்டாலின், இபிஎஸ், பழனிசாமி, திமுக

சென்னை : ஆட்சி மாற்றத்தால், கூட்டுறவு வங்கிகளில், 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுமா அல்லது 6 சவரன் வரையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழக அரசின், கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், மாநில தலைமை கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், தங்க நகைகளை அடமானம் வைத்து, பலரும் கடன் வாங்குகின்றனர். சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கூட்டுறவு வங்கிகளில், 5 சவரனுக்கு உட்பட்ட, நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தேர்தல் பிரசாரத்தின் போது தெரிவித்தார். இது, அக்கட்சியின் தேர்தல் வாக்குறுதியாகவும் அறிவிக்கப்பட்டது.
ஆனால், 'கூட்டுறவு நிறுவனங்களில், 6 சவரன்வரை அடகு வைத்து பெற்ற நகை கடன் தள்ளுபடி செய்யப்படும்' என, பிப்., 26ல், சட்டசபையில், 110 விதியின் கீழ், அப்போதைய முதல்வரான இ.பி.எஸ்., தெரிவித்தார்.அன்று மாலையே, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், நடத்தை விதிகள் உடனே அமலுக்கு வந்தன. இதனால், நகைக்கடன் தள்ளுபடி செய்யும் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. அந்த விபரம் தெரியாமல், அடமானம் வைத்தவர்கள்,தங்களின் நகைகளை திரும்ப வழங்க கோரி, வங்கிகளுக்கு சென்று, ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.


latest tamil news



இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்று, தி.மு.க., ஆட்சியை பிடித்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், முதல்வராக பொறுப்பேற்று உள்ளார். இதனால், முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., சட்டசபையில் அறிவித்த, 6 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுமா அல்லது தி.மு.க.,வின் வாக்குறுதியான, 5 சவரன் தள்ளுபடி செய்யப்படுமா என்ற குழப்பம், பலரிடமும் எழுந்துள்ளது.

இது குறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கூட்டுறவு வங்கிகளில், நடப்பாண்டு ஜன., வரை, 5 சவரன் வரையும், 6 சவரன் வரையும் வழங்கப்பட்ட, கடன் நிலுவை விபரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. புதிய அரசு, எந்த அளவிலான நகை கடனை தள்ளுபடி செய்ய உத்தரவிடுகிறதோ, அதை செயல்படுத்துவதற்கான பணி விரைந்து மேற்கொள்ளப்படும்' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
09-மே-202121:12:26 IST Report Abuse
Ray இங்கே அடகு வைத்த சவரன் எத்தனை என்பது முக்கியமல்ல கடன் எவ்வளவு என்பதே கணக்கில் வரவேண்டும் ஏனெனில் பத்து சவரனை வைத்து கடன் குறைவாக வாங்கியிருந்தால் அவர்கள் பாதிக்கப் படுவார்கள் ஐந்து சவரனை வைத்து அதிகபட்ச கடன் வாங்கியவருக்கு லாபம்
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
09-மே-202120:09:15 IST Report Abuse
bal வரிப்பணத்தை இப்படியா இலவசமாக கொடுப்பது...இவன் ஏன் கடன் வாங்குறான்... சக்தியில்லையேல் நகை மட்டும் எப்படி வந்தத அடகு வைக்க..
Rate this:
Cancel
THANGARAJ - CHENNAI,இந்தியா
09-மே-202119:29:59 IST Report Abuse
THANGARAJ கோணம் விளக்கம் சொல்லுங்க, விவசாய கடன் ரத்து. விவசாய உரம் மானிய விலையில், விவசாயிகள் விலை பொருளை உழவர் சந்தையில் விற்கலாம், விவசாயத்துக்கு நகை வைத்து வாங்கிய கடன் ரத்து, விவசாய காய்கறிகள் அரசு பஸ்சில் கொண்டு செல்லலாம், இவ்வளவு இருந்தும் ஏன் விலைவாசி குறைய வில்லை, விவசாயிக்கு வருமானம் இல்லை. கொஞ்சம் சொல்லுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X