பொது செய்தி

தமிழ்நாடு

'முதல்வர்' மாவட்டம் பெருமை இழந்த சேலம்: தலைமை செயலர் மாவட்டம் 'பட்டம்'

Updated : மே 09, 2021 | Added : மே 09, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சேலம் : 'முதல்வர்' மாவட்டம் எனும் பெருமையை சேலம் இழந்த நிலையில், இறையன்பு தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டதால், 'தலைமைச் செயலர் மாவட்டம்' எனும் புதிய பட்டத்தை பெற்றுள்ளது.தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின், அப்போதைய நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சரான, சேலம் மாவட்டம், இடைப்பாடியைச் சேர்ந்த இ.பி.எஸ்., 2017 பிப்ரவரியில், முதல்வராக பொறுப்பேற்றார்.
salem, chief minister, district, chief seceretary,  சேலம், தலைமை செயலர், முதல்வர், மாவட்டம், பட்டம்

சேலம் : 'முதல்வர்' மாவட்டம் எனும் பெருமையை சேலம் இழந்த நிலையில், இறையன்பு தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டதால், 'தலைமைச் செயலர் மாவட்டம்' எனும் புதிய பட்டத்தை பெற்றுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின், அப்போதைய நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சரான, சேலம் மாவட்டம், இடைப்பாடியைச் சேர்ந்த இ.பி.எஸ்., 2017 பிப்ரவரியில், முதல்வராக பொறுப்பேற்றார். இதனால், சேலத்துக்கு முதல்வர் மாவட்டம் என்ற பெருமை கிடைத்தது.தொடர்ந்து, அரசின் தலைமைச் செயலராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் ஓய்வு பெற, அப்பதவியில், சேலம் மாவட்டம், வாழப்பாடியைச் சேர்ந்த சண்முகம், 2019 ஜூனில் பொறுப்பேற்றார். இதனால், முதல்வர், தலைமைச் செயலர் என, இரு பெரும் அதிகார மையங்களை பெற்ற மாவட்டமாக சேலம் இருந்தது.


latest tamil news


கடந்த ஜன., 31ல் சண்முகம் ஓய்வு பெற்றார். தொடர்ந்து, அரசின் ஆலோசகராக நியமிக்கப் பட்டார். தற்போதைய சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற கடந்த, 3ல் தன் பதவியை சண்முகம் ராஜினாமா செய்தார். 7ல் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றார்.இதனால், முதல்வர் மாவட்ட பெருமையை சேலம் இழந்தது. இந்நிலையில், சேலம், சூரமங்கலத்தைச் சேர்ந்த இறையன்பு, தமிழக அரசின் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டார். இதனால், சேலத்துக்கு மீண்டும் தலைமைச் செயலர் மாவட்ட, 'பட்டம்' கிடைத்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
09-மே-202121:32:18 IST Report Abuse
bal அடுத்தவர் புகழை அழிக்கும் வன்மம்...முதல் நாளே போட்டோக்களை எடுத்தது மற்றும் அம்மா உணவகத்தை தாக்கியது...தெரிந்ததே..இனி தெரியாமல் நடக்கும்
Rate this:
Cancel
09-மே-202114:54:40 IST Report Abuse
மு.செந்தமிழன் அம்மன் சல்லிக்கு பிரயோசனம் இல்லை
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
09-மே-202114:45:38 IST Report Abuse
அசோக்ராஜ் ஆம். முதல்வர் மாவட்டம் என்ற பெருமை சேலத்தை விட்டு நீங்கி ஓங்கோலுக்குப் போய் விட்டது. ஜமோ, முகஸ் என்ற இரண்டு முதல்வர்களை அளித்து ஆந்திரா பெருமை அடைகிறது. தமில் வால்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X