முதல்வர் மாவட்டம் பெருமை இழந்த சேலம்: தலைமை செயலர் மாவட்டம் பட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'முதல்வர்' மாவட்டம் பெருமை இழந்த சேலம்: தலைமை செயலர் மாவட்டம் 'பட்டம்'

Updated : மே 09, 2021 | Added : மே 09, 2021 | கருத்துகள் (6)
Share
சேலம் : 'முதல்வர்' மாவட்டம் எனும் பெருமையை சேலம் இழந்த நிலையில், இறையன்பு தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டதால், 'தலைமைச் செயலர் மாவட்டம்' எனும் புதிய பட்டத்தை பெற்றுள்ளது.தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின், அப்போதைய நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சரான, சேலம் மாவட்டம், இடைப்பாடியைச் சேர்ந்த இ.பி.எஸ்., 2017 பிப்ரவரியில், முதல்வராக பொறுப்பேற்றார்.
salem, chief minister, district, chief seceretary,  சேலம், தலைமை செயலர், முதல்வர், மாவட்டம், பட்டம்

சேலம் : 'முதல்வர்' மாவட்டம் எனும் பெருமையை சேலம் இழந்த நிலையில், இறையன்பு தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டதால், 'தலைமைச் செயலர் மாவட்டம்' எனும் புதிய பட்டத்தை பெற்றுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின், அப்போதைய நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சரான, சேலம் மாவட்டம், இடைப்பாடியைச் சேர்ந்த இ.பி.எஸ்., 2017 பிப்ரவரியில், முதல்வராக பொறுப்பேற்றார். இதனால், சேலத்துக்கு முதல்வர் மாவட்டம் என்ற பெருமை கிடைத்தது.தொடர்ந்து, அரசின் தலைமைச் செயலராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் ஓய்வு பெற, அப்பதவியில், சேலம் மாவட்டம், வாழப்பாடியைச் சேர்ந்த சண்முகம், 2019 ஜூனில் பொறுப்பேற்றார். இதனால், முதல்வர், தலைமைச் செயலர் என, இரு பெரும் அதிகார மையங்களை பெற்ற மாவட்டமாக சேலம் இருந்தது.


latest tamil news


கடந்த ஜன., 31ல் சண்முகம் ஓய்வு பெற்றார். தொடர்ந்து, அரசின் ஆலோசகராக நியமிக்கப் பட்டார். தற்போதைய சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற கடந்த, 3ல் தன் பதவியை சண்முகம் ராஜினாமா செய்தார். 7ல் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றார்.இதனால், முதல்வர் மாவட்ட பெருமையை சேலம் இழந்தது. இந்நிலையில், சேலம், சூரமங்கலத்தைச் சேர்ந்த இறையன்பு, தமிழக அரசின் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டார். இதனால், சேலத்துக்கு மீண்டும் தலைமைச் செயலர் மாவட்ட, 'பட்டம்' கிடைத்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X