பொது செய்தி

இந்தியா

ஆக்சிஜன் சிகிச்சையில் ஒன்பது லட்சம் பேர்

Updated : மே 09, 2021 | Added : மே 09, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி : கொரோனா பாதிப்பிற்கு உள்ளானவர்களில், தற்போது, 9.02 லட்சம் பேர், ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெறுவதாக, மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து, மத்திய அமைச்சர்கள் குழுவினருடன், சுாகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், 'ஆன்லைன்' வாயிலாக ஆலோசனை நடத்தினார்.இதில், வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், விமான போக்குவரத்து

புதுடில்லி : கொரோனா பாதிப்பிற்கு உள்ளானவர்களில், தற்போது, 9.02 லட்சம் பேர், ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெறுவதாக, மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.



latest tamil news



கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து, மத்திய அமைச்சர்கள் குழுவினருடன், சுாகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், 'ஆன்லைன்' வாயிலாக ஆலோசனை நடத்தினார்.இதில், வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, உரம் மற்றும் ரசாயன துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


latest tamil news




0.39 சதவீதம் பேர் வென்டிலேட்டர் உதவியுடன்


அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியதாவது: கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானவர்களில், 4.88 லட்சம் பேர், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். பாதிப்பிற்கு உள்ளான, 1.70 லட்சம் பேருக்கு, 'வென்டிலேட்டர்' உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது; 9.02 லட்சம் பேர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சையில் உள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பில், 1.34 சதவீதம் பேர், தீவிர சிகிச்சை பிரிவிலும், 0.39 சதவீதம் பேர் வென்டிலேட்டர் உதவியுடனும் சிகிச்சை பெறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

கண்காணிப்பு குழுநாடு முழுதும் ஆக்சிஜன் சப்ளையை கண்காணிக்க, மேற்கு வங்க பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் பாப்டோஷ் பிஸ்வாஸ், ஹரியானா மாநிலம், குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் நரேஷ் டிரீஹன் உட்பட, 12 பேர் அடங்கிய குழுவை, உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. இந்த குழு, ஆக்சிஜன் உற்பத்தி அளவு, மாநிலங்களுக்கான தேவைகள், வினியோகம் ஆகியவற்றை ஆய்வு செய்து, உச்ச நீதிமன்றத்துக்கும், மத்திய அரசுக்கும் அறிக்கை அளிக்கும்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ARTICLE 356 அமாவாசை..உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி ரொம்ப கம்மி... வ்வ்வ் கொஞ்சமாவது ஒரு கோடி வர வேண்டாம்... என்னமோ கரோனாவாம்ம்....சாவாம்ம்... போங்கடா இண்டரெஸ்ட் இல்லாம ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X