பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் மேலும் 4.03 லட்சம் பேருக்கு கொரோனா

Added : மே 09, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில், தொடர்ந்து 4வது நாளாக, தினமும் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4.03 லட்சம் பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 4,03,738 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால், வைரசினால்
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி: இந்தியாவில், தொடர்ந்து 4வது நாளாக, தினமும் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4.03 லட்சம் பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 4,03,738 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால், வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,22,96,414 ஆக அதிகரித்து உள்ளது.

3,86,444 பேர் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,83,17,404 ஆக உயர்ந்தது. தற்போது, 37,36,648 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


latest tamil news



வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில், 4,092 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால்,கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,42,362 ஆக அதிகரித்தது.

நேற்று மட்டும் 18,65,428 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதனால், பரிசோதனை செய்யப்பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 30,22,75,471 ஆக அதிகரித்து உள்ளது.

மேலும் நேற்று முன்தினம் (மே 7) வரை 16,94,39.663 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
09-மே-202112:06:49 IST Report Abuse
g.s,rajan புள்ளி விவரங்கள் யாருக்கும் தேவை இல்லை எத்தனை பேர் இறந்து விட்டனர் எத்தனை பேருக்கு கொரோனா என்று கூறுவதால் என்ன பெரிய பயன் மக்களுக்கு ஏற்படப்போகிறது ,வெறும் பீதியைக் கிளப்பி மக்களை பயமுறுத்துவதுதான் ஒரு அரசாங்கத்திற்கு அழகா ???மக்கள் ஏற்கனவேமன உளைச்சலில் உள்ளனர் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X