பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா கட்டளை மையத்திற்கு 6 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

Added : மே 09, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கை உள்ளிட்ட விவரங்களை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்ட கொரோனா கட்டளை மையத்திற்கு 6 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதையடுத்து, ‛கொரோனா கட்டளை மையம்' (War Room - வார் ரூம்) திறக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். தனியார் மற்றும்
Tamilnadu, WarRoom, IAS, Officers, தமிழகம், வார் ரூம், கட்டளை மையம், ஐஏஎஸ், அதிகாரிகள், நியமனம்

சென்னை: தமிழகத்தில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கை உள்ளிட்ட விவரங்களை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்ட கொரோனா கட்டளை மையத்திற்கு 6 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதையடுத்து, ‛கொரோனா கட்டளை மையம்' (War Room - வார் ரூம்) திறக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவை, இருப்பு, படுக்கைகளின் தேவை, தடுப்பூசி இருப்பு, தேவை ஆகியவற்றை அனைத்து மாவட்டங்களும் ஒருங்கிணைந்து செயல்பட இந்தக் கட்டளை மையம் உதவியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அமைக்கப்பட்ட கட்டளை மையத்திற்கு 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


latest tamil news


இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா கட்டளை மையத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக தாரேஷ் அகமது ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கே.நந்தகுமார், உமா, வினித், கே.பி.கார்த்திகேயன், அழகுமீனா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
09-மே-202123:42:58 IST Report Abuse
Pugazh V மனுநீதி, தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே அமைச்சர் களை விட.ஐஏஎஸ் அதிகாரிகள் தான் அதிகமாக இருக்கிறார்கள். அமைச்சர் கள் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்க வேண்டும். மாவட்டம் தோறும் தளபதி அவர்கள், சுகாதார மையங்கள் அமைக்கிறார். மனுநீதி என்னடான்னா கலெக்டர் கள் அவ்லாரும் சென்னை க்கு வரணும் னு எழுதியிருக்கிறார்.. என்ன சொல்ல வருது இந்த ஐடி ????
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
09-மே-202123:39:46 IST Report Abuse
Pugazh V சீமான்..5 சுகாதார செயலர்கள் வேண்டும் என்று ஆலோசனை சொன்னார். ஆனால் தறபதியோ ஆறு பேரை நியமித்து விட்டார். சீமானை அங்கே பாராட்டி ய.கூட்டம் இங்கே தளபதிக்கு நன்றி சொல்ல வரும்.
Rate this:
Cancel
velan - california,யூ.எஸ்.ஏ
09-மே-202119:28:11 IST Report Abuse
velan 1. தடுப்பு ஊசி செயல்திறன் எப்படி ? என்ன ஆச்சு ? 2. கொரோன டெஸ்ட் எடுப்பதால் என்ன பயன் ? இனி சுரம் வந்தால் வீட்டினுள்ளேயே இருக்கவேண்டியதுதான் டாக்டரை போன் அல்லது வீடியோவில் பார்த்து மருந்து எடுக்கலாம் ஆக்சிஜன் மீட்டர் மற்றும் தெர்மோ மீட்டரை வைத்து செக் செய்து கொண்டே இருக்கலாம் தேவை எனில் டாக்டரை அணுகலாம் 3. கடைகளில் இனி நேரடி விற்பனை செய்யாமல் போன் மூலம் ஆர்டர் எடுத்து டெலிவரி செய்யலாம் 4. போலீஸ் மற்றும் நகராட்சி அதிகாரிகள் மக்களை மாஸ்க் அணிய , தனிமனித இடைவெளியுடன் இருக்க கண்காணிக்கலாம் 5. வருமுன் செய்வதே நல்ல திட்டம் வந்த பின் அதை எதிர் கொள்ள தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் அரசின் கீழ் வர வேண்டும் இனி கொரோன செலவுகள் அனைத்தும் அரசு பார்த்து கொள்ள வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X