பொது செய்தி

இந்தியா

உ.பி., டில்லியில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடிப்பு

Updated : மே 09, 2021 | Added : மே 09, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: உத்தர பிரதேசம் மற்றும் டில்லியில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, மே 17 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.தலைநகர் டில்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஏப்.,19ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர், அது நீட்டிக்கப்பட்டது. இவ்வாறு நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு நாளையுடன் நிறைவு பெற இருந்தது.இந்நிலையில்,
டில்லி, கொரோனா, கொரோனா வைரஸ், கோவிட்19, ஊரடங்கு, முதல்வர், கெஜ்ரிவால்,

புதுடில்லி: உத்தர பிரதேசம் மற்றும் டில்லியில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, மே 17 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

தலைநகர் டில்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஏப்.,19ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர், அது நீட்டிக்கப்பட்டது. இவ்வாறு நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு நாளையுடன் நிறைவு பெற இருந்தது.

இந்நிலையில், நிருபர்களை சந்தித்த முதல்வர் கெஜ்ரிவால் கூறுகையில், டில்லியில், கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த ஊரடங்கு காலத்தில், சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த பயன்படுத்தினோம். ஆக்சிஜன் சப்ளை பிரச்னையாக இருந்தது. தற்போது, டில்லியில் நிலைமை மேம்பட்டு வருகிறது. ஆக்சிஜன் தேவை என அவசர செய்தி வருவதில்லை.


latest tamil news




டில்லியில் தடுப்பூசி போடும் பணி துவங்கி உள்ளது. இதற்காக பள்ளிகளில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஏராளமான இளைஞர்கள் இதில், பங்கெடுத்து கொண்டனர். தற்போது, தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டாலும், மத்திய அரசு உதவும் என்ற நம்பிக்கை உள்ளது.

டில்லியில், அமலில் உள்ள ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுகிறது. மே 17 வரை அமலில் இருக்கும். இந்த காலத்தில் டில்லி மெட்ரோ ரயில்கள் இயங்காது. இவ்வாறு அவர் கூறினார் .


உ.பி.,



அதேபோல், உத்தரபிரதேசம் மாநிலத்திலும் ஊரடங்கை மே 17 வரை நீட்டித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அமலாகியுள்ள ஊரடங்கு நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு (மே 17 வரை) முழு ஊரடங்கை நீட்டித்து உ.பி., அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raghunathan Nagarajan Ragu Naga - Atlanta,யூ.எஸ்.ஏ
10-மே-202107:27:06 IST Report Abuse
Raghunathan Nagarajan Ragu Naga இதுபோன்ற நடவடிக்கைகளை மார்ச்சிலேயே எடுத்து இருந்தீர்களானால் கொரோனாவை நிச்சயம் கட்டுப்படுத்தி இருக்கலாம். பிறரை குறை கூறுவதை விட்டுட்டு கடமையை செய்யுங்கள் முதல்வரே. வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
Sivaraman - chennai ,இந்தியா
09-மே-202113:24:44 IST Report Abuse
Sivaraman சிறிய ஜனத்தொகை கொண்ட நாடுகளே திண்டாடும் பொழுது அதிக எதற்கும் கட்டுப்படாத மதம் மொழி இனம் அரசியலால் வேறுபட்டு நிற்கின்ற நம் நாட்டில் கடுமையான நடவடிக்கைகள் மூலம் தான் குறைக்க முடியும். குறைந்தது ஒரு வருடம் அதிக எச்சரிக்கையுடன் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X