அசாம் முதல்வராக ஹிமாந்த பிஸ்வா தேர்வு

Updated : மே 09, 2021 | Added : மே 09, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
கவுகாத்தி: அசாமில் வெற்றி பெற்ற பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் குழு தலைவராக ஹிமாந்த பிஸ்வா சர்மா தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் விரைவில் முதல்வராக பதவியேற்க உள்ளார்.மொத்தம், 126 இடங்களை உடைய, அசாம் சட்டசபைக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. அதில், ஆளும் கட்சியான, பா.ஜ., 60 இடங்களிலும், கூட்டணி கட்சிகள், 15 இடங்களிலும் வென்றன. கடந்த, 2016ல், சர்பானந்தா சோனவாலை முதல்வர் வேட்பாளராக
Assam, Himanta Biswa Sarma, BJP, அசாம், பாஜ, ஹிமாந்த பிஸ்வா சர்மா,

கவுகாத்தி: அசாமில் வெற்றி பெற்ற பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் குழு தலைவராக ஹிமாந்த பிஸ்வா சர்மா தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் விரைவில் முதல்வராக பதவியேற்க உள்ளார்.

மொத்தம், 126 இடங்களை உடைய, அசாம் சட்டசபைக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. அதில், ஆளும் கட்சியான, பா.ஜ., 60 இடங்களிலும், கூட்டணி கட்சிகள், 15 இடங்களிலும் வென்றன. கடந்த, 2016ல், சர்பானந்தா சோனவாலை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை பா.ஜ., சந்தித்தது. சமீபத்தில் நடந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. மாநில அமைச்சரான ஹிமந்த பிஸ்வா சர்மா, வட கிழக்கு ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். வட கிழக்கு மாநிலங்களில், பா.ஜ., வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளதால், அவர் முதல்வராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் வெளியாகி, ஒரு வாரமாகி உள்ள நிலையில், அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், கட்சி தலைமை அழைப்பை ஏற்று, சர்பானந்த சோனவால் மற்றும் ஹிமந்த பிஸ்வா சர்மா ஆகியோர் டில்லி விரைந்தனர். கட்சி தலைவர் நட்டா, பொதுச் செயலர் பி.எல்.சந்தோஷ், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து, அவர்கள் ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து, முதல்வர் பதவியில் இருந்து சர்பானந்தா சோனவல் ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை கவர்னரிடம் வழங்கினார்.


latest tamil news


இந்நிலையில், கவுகாத்தியில் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் முன்னிலையில் நடந்த இந்த கூட்டத்தில், சட்டசபை குழு தலைவராக ஹிமாந்த பிஸ்வா சர்மா தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் விரைவில் முதல்வராக பதவியேற்க உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
10-மே-202108:39:07 IST Report Abuse
தல புராணம் நித்தய கண்டம் - நிச்சயம்.. பூர்ண ஆயுசு - சந்தேகம் ?
Rate this:
Cancel
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
09-மே-202117:58:40 IST Report Abuse
Sankar Ramu வாழ்த்துக்கள். அசாமை மேலும் அழகு படுத்தி சுற்றுலா வளர்சியடைய பாடுபடவும்.
Rate this:
Cancel
suresh - nagercoil,இந்தியா
09-மே-202116:29:45 IST Report Abuse
suresh வாழ்த்துக்கள்....வாய்ப்பு எல்லோருக்கும் கொடுக்கும் அரசு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X