விண்வெளியிலிருந்து வந்த சீன ராக்கெட் இந்திய பெருங்கடலில் விழுந்தது!

Updated : மே 09, 2021 | Added : மே 09, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
பெய்ஜிங்: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சீனாவால் அனுப்பப்பட்ட 'லாங் மார்ச் 5பி' ராக்கெட் மீண்டும் பூமிக்கு திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து இந்தியப் பெருங்கடலில் விழுந்தது.அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான் போன்ற நாடுகளால் சர்வதேச விண்வெளி நிலையம் புவி வட்ட பாதையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பல்வேறு ஆய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதில் சீனா
ChineseRocket, Disintegrating, Maldives, IndianOcean, சீனா, ராக்கெட், உடைந்த பாகம், இந்திய பெருங்கடல், மாலத்தீவு

பெய்ஜிங்: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சீனாவால் அனுப்பப்பட்ட 'லாங் மார்ச் 5பி' ராக்கெட் மீண்டும் பூமிக்கு திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து இந்தியப் பெருங்கடலில் விழுந்தது.

அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான் போன்ற நாடுகளால் சர்வதேச விண்வெளி நிலையம் புவி வட்ட பாதையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பல்வேறு ஆய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதில் சீனா இடம்பெறவில்லை. அது சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. பூமிக்கு மேலே, 370 கி.மீ., உயரத்தில் ஆங்கில டி வடிவில் 66 டன் எடையில் இந்த நிலையம் அமையவுள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் இப்பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.


latest tamil news


அதற்காக கடந்த ஏப்., 29 அன்று 'லாங் மார்ச் 5பி' என்ற ராக்கெட்டுடன் வின்கலம் ஒன்று புறப்பட்டது. அந்த ராக்கெட்டை மீண்டும் பூமிக்கு திரும்பும் படி வடிவமைத்திருந்தனர். ஆனால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பூமியுடனான கட்டுப்பாட்டை அந்த ராக்கெட் இழந்தது. பூமியில் எங்கு வேண்டுமானாலும் விழும் என்ற நிலை ஏற்பட்டது. புவி வளிமண்டலத்தில் நுழைந்தவுடன் அதன் பெரும்பாலான பாகங்கள் அழிந்துவிடும், பயம் தேவையில்லை என்றது சீனா.

அதே போல் இன்று (மே 09) அந்த ராக்கெட் புவி வளிமண்டலத்திற்குள் நுழைந்தது. அதன் பாகங்கள் பலவும் அழிந்து போன நிலையில், எஞ்சிய எச்சங்கள் இந்திய பெருங்கடலில் விழுந்தது. மாலத்தீவுகளுக்கு மேற்கே கடலில் விழுந்ததாக சீன விண்வெளி அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்திய நேரப்படி காலை 8 மணிக்கு விழுந்துள்ளது. அதன் கழிவுகள் எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பற்றி தகவல்கள் இன்னும் குறிப்பிடப்படவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-மே-202122:41:26 IST Report Abuse
ராம கிருஷ்ணன் சீன ராக்கெட் கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் விழுந்தால் கேரள கம்யூனிஸ்ட்கள் என்ன சொல்லி சமாளிப்பார்கள். விழுந்திருக்கலாம் 😜😁😜
Rate this:
Cancel
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
09-மே-202120:23:00 IST Report Abuse
கொக்கி குமாரு விண்வெளியில் இருந்து அதிகம் ஊழல் செய்தவரின் வீட்டை போட்டோ எடுத்தால் அதில் கோபாலபுரத்தில் உள்ள ஒரு வீட்டின் மாடி தெரியும்.
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
09-மே-202119:15:00 IST Report Abuse
sankaranarayanan சீனாக்காரனின் இலக்கே இந்தியாதான். எதோ தவறிப்போய் மாலத்தீவின் அருகில் விழுந்துவிட்டது. ஏன் அதை சீனாக்கடலிலேயே விழ செய்யக்கூடாதா? எல்லாம் தெரிந்துதான் செய்துள்ளான். இதை நம்ப வேண்டுமா கம்மிகளே? வின் வெளியில் ராக்கட்டும் மூலம் கொரோனா அல்லது மற்ற கிருமிகளை அனுப்பி உலகத்தையே அழிக்கும் வல்லமை கொண்ட நாடு சீனாதான். இந்த பூனை இந்த பாலைக்குடிக்குமா என்றுதான் கொரோனாவை உலகம் முழுவதும் பரப்பிவிட்டு, தனது பொருளாதாரத்தை உயர்த்திக்கொண்டு செல்லவும் நயா வஞ்சக நாடு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X