பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கை மீறினால் வாகன பறிமுதல் கூடாது: டிஜிபி அறிவுறுத்தல்

Updated : மே 09, 2021 | Added : மே 09, 2021 | கருத்துகள் (32)
Share
Advertisement
சென்னை: ஊரடங்கு விதி மீறும் வாகனங்களை பறிமுதல் செய்யக் கூடாது என டிஜிபி திரிபாதி அறிவுறுத்தியுள்ளார்.கொரோனா பரவல் தீவிரமடைந்ததை அடுத்து, தமிழகத்தில் நாளை (மே 10) முதல் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், ஊரடங்கு விதி மீறி வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
TNLockdown, DGP_Tripathi, TNPolice, தமிழகம், ஊரடங்கு, டிஜிபி, திரிபாதி, விதி மீறல், வாகனங்கள், பறிமுதல், வழக்குப்பதிவு

சென்னை: ஊரடங்கு விதி மீறும் வாகனங்களை பறிமுதல் செய்யக் கூடாது என டிஜிபி திரிபாதி அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா பரவல் தீவிரமடைந்ததை அடுத்து, தமிழகத்தில் நாளை (மே 10) முதல் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், ஊரடங்கு விதி மீறி வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


latest tamil news


இந்நிலையில், ஊரடங்கு விதி மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக டிஜிபி ஜே.கே.திரிபாதி கூறுகையில், ‛முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களிடம் போலீசார் மிகுந்த கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். எந்த சூழலிலும் கோபமாகவோ, மரியாதை குறைவாகவோ மக்களிடம் போலீசார் நடத்துக்கொள்ளக் கூடாது. ஊரடங்கு விதி மீறலுக்காக வாகனத்தை கைப்பற்றுதல் கூடாது. விதிமுறைகளை மீறும் வாகனத்தை புகைப்படம் எடுத்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும். வாகனத்தை கைப்பற்றினால் சிறிதுநேரத்தில் விடுவிக்கவேண்டும்,' என அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
10-மே-202111:27:38 IST Report Abuse
அசோக்ராஜ் முதல் அலையில் சராசரியாக பைக்குக்கு அஞ்சாயிரம் வசூல் ஆச்சு. இந்த அலையில் காக்கியின் அதிர்ஷ்டம் எப்படி இருக்குமோ?
Rate this:
Cancel
Sathiamoorthy.V - Kalpakkam,இந்தியா
10-மே-202109:11:19 IST Report Abuse
Sathiamoorthy.V அது என்ன வாட்ஸ்அப்பில் யார் பேசுவது என சொல்லாமல் வயர்லெஸில் மக்களை மிரட்டுவது. போலீஸ் துறைக்கு இது அழகல்ல. தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கட்டும். எல்லாமே அருகில் உள்ளது என பொதுவாக பேசுகிறார்கள். இவைகள் லஞ்சத்திற்கு வழி வகுக்கும். வயதானவர்கள் கைப்பையை கையில் சுமந்து வர முடியுமா ?
Rate this:
Cancel
Sathiamoorthy.V - Kalpakkam,இந்தியா
10-மே-202108:56:58 IST Report Abuse
Sathiamoorthy.V வந்தாரை வாழவைக்கும் தமிழகம் . மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கும் என சொல்லி விட்டு பேச்சு மாறக்கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X