நேரு, இந்திரா செய்த பணிகளால் இந்தியா பிழைக்கிறது: சிவசேனா

Updated : மே 09, 2021 | Added : மே 09, 2021 | கருத்துகள் (88)
Share
Advertisement
மும்பை: கடந்த 70 ஆண்டுகளாக முந்தைய பிரதமர்கள் உருவாக்கிய அமைப்பினால் தான் இந்தியா தற்போது கொரோனா தொற்றுநோயை நிர்வகிக்கிறது என சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னா தெரிவித்துள்ளது.ஞாயிறு நிலவரப்படி இந்தியாவில் கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் இருப்பவர்களின் மொத்த எண்ணிக்கை 37 லட்சமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் தொற்று
India, Surviving, Work Done, Jawaharlal Nehru, Indira Gandhi, Shiv Sena, Saamana, Covid19, நேரு, இந்திரா, பணிகள், இந்தியா, பிழைக்கிறது, சிவசேனா, சாம்னா

மும்பை: கடந்த 70 ஆண்டுகளாக முந்தைய பிரதமர்கள் உருவாக்கிய அமைப்பினால் தான் இந்தியா தற்போது கொரோனா தொற்றுநோயை நிர்வகிக்கிறது என சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னா தெரிவித்துள்ளது.

ஞாயிறு நிலவரப்படி இந்தியாவில் கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் இருப்பவர்களின் மொத்த எண்ணிக்கை 37 லட்சமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 3.8 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 4092 பேர் இறந்துள்ளனர். இதனால் கொரோனா உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை இந்தியாவில் 2,42,362 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் சிவசேனாவின் சாம்னா பத்திரிகையில் மத்திய பா.ஜ., அரசை விமர்சித்து கட்டுரை எழுதியுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: நேரு, சாஸ்திரி, இந்திரா, ராஜிவ், நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் ஆகியோரின் முந்தைய அரசாங்கங்கள் செய்த வளர்ச்சிப் பணிகள், திட்டங்கள், அவர்கள் தந்த நம்பிக்கையால் தற்போது நாடு பிழைக்கிறது. அதற்காக அவர்களுக்கு நன்றி. சிறிய நாடுகள் எல்லாம் இந்தியாவுக்கு உதவிப்பொருட்கள் வழங்கும் வேளையில் மத்திய அரசு டில்லியை அழகுப்படுத்தும் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது.


latest tamil news


வங்கதேசம் 10 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்துகளை அனுப்பியுள்ளது. பூட்டான் ஆக்சிஜனை அனுப்பியுள்ளது. நேபாளம், மியான்மர் மற்றும் இலங்கையும் 'தன்னிறைவு இந்தியாவுக்கு' உதவிகள் வழங்கியுள்ளன. ஏழை நாடுகள் இந்தியாவுக்கு உதவி செய்கையில், டில்லியில் ரூ.20,000 கோடி மதிப்பிலான மத்திய விஸ்டா திட்டத்தை நிறுத்த பிரதமர் மோடி தயாராக இல்லை. பிரச்னைகளை புரிந்துக்கொள்கிற, தேசியவாத அரசு அரசியல் நன்மை தீமைகள் பற்றி சிந்திக்காது. தொற்றுநோயைத் தோற்கடிக்கும் வழிகளைப் பற்றி விவாதிக்க அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளின் தேசிய குழுவை அமைத்திருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (88)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
15-மே-202121:08:39 IST Report Abuse
madhavan rajan இந்த கண்டுபிடிப்பு மிகவும் தாமதமாக இந்த கட்சி தெரிந்துகொண்டிருக்கிறது. உடனே கட்சியை காங்கிரசோடு இணைத்துவிடவும். அவர்கள் கொள்ளையிலும் பங்கு உண்டு.
Rate this:
Cancel
raj - salem,இந்தியா
12-மே-202117:13:03 IST Report Abuse
raj ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டத்தின் கீழ் பல ஆயிரம் கோடிகள் வீணடிக்கப்படுகிறது .
Rate this:
Cancel
10-மே-202118:20:22 IST Report Abuse
கி நாராயணன் ஏன் இந்த செய்திக்கு வாசகர் விமர்சனம் உள்ளீடாகவில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X