அரசியல் செய்தி

தமிழ்நாடு

மீண்டும் முழு ஊரடங்கு நிலை ஏற்படாது: முதல்வர் ஸ்டாலின்

Added : மே 09, 2021 | கருத்துகள் (44)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தும் நிலை ஏற்படாது என தொழில்துறையினர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், நாளை (மே 10) முதல் 24ம் தேதி வரையிலான 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட
TamilnaduCM, Stalin, TNLockdown, முதல்வர், ஸ்டாலின், முழு ஊரடங்கு, நிலை ஏற்படாது, தொழில்துறையினர்

சென்னை: தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தும் நிலை ஏற்படாது என தொழில்துறையினர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், நாளை (மே 10) முதல் 24ம் தேதி வரையிலான 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கிறது. இந்த ஊரடங்கு நாட்களில் வணிக நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஊரடங்கு சூழல் குறித்து தொழில் துறையினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஸ்டாலின் பேசுகையில், ‛தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தும் நிலை ஏற்படாது. முழு ஊரடங்கு அமல்படுத்தும் நிலை வந்தால் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்,' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
10-மே-202116:47:51 IST Report Abuse
g.s,rajan ஆமாம் கொரோனா வைரஸ் இருக்கா இல்லையா இல்லை சும்மா உடான்ஸ் உடுறாங்களா ???ஏன் மற்ற வளர்ந்த நாடுகளில் கொரோனா இரண்டு ரிலீஸ் ஆகவில்லை ??? ஜி.எஸ்.ராஜன், சென்னை .
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
10-மே-202111:13:04 IST Report Abuse
அசோக்ராஜ் பாதி ஊரடங்கு என்று மாநில சிறுபான்மையினரான இந்துக்கள் குற்றம் சொல்வது அபத்தம். மாநில பெரும்பான்மையினரால் சனநாயக வழியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆபிரகாமிய அரசு ரம்ஜான் திருவிழாவைக் கணக்கில் எடுக்காமல் இருக்க முடியுமா? முஸ்லீம் வணிகர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டாமா? சொன்னதைக் செய்வார். சொல்லாததையும் செய்வார்.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
10-மே-202108:54:25 IST Report Abuse
g.s,rajan ஏற்கனவே தேர்தலில் தாங்கள் ஜெயிப்பதற்கு முன் தமிழகத்தில் ஊரடங்கே இருக்காது என்று குருபீர்கள் ஆனால் தற்போது கொரோனா வியாதி பரவுதுன்னு சொல்லி முழு ஊரடங்கை உடனே அறிவிச்சிட்டீங்களே ,இது நியாயமா ??? தற்போது கொரோனா வைரஸ் காரணமாக தமிழகப் பொருளாதாரம் முற்றிலும் முடங்கிப் போயுள்ளது ,இதை முதலில் முதல்வர் ஸ்டாலின் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏற்கனவே போட்ட பொது முடக்கம் காரணமாக பல மக்களிடம் பணப் புழக்கம் இல்லை வேலை இல்லை தொழில் இல்லை,போதிய வருமானம் இல்லாமல் வாடும் மக்களைக் காக்க திரு ஸ்டாலின் அவர்கள் தலைமையில் பல்வேறு துரித நடவடிக்கைகளை ஆளும் திமுக கட்சி ஆக்க பூர்வமாக எடுக்க வேண்டும். மக்கள் கையில் பத்துப் பைசா கூட இல்லாமல் குடும்பம் நடத்த முடியாமல் திணறுகின்றனர் ,தவியா தவிக்கின்றனர் எனவே மக்களின் வாழ்வு துளிர் விட தேவையான நடவடிக்கைகள் மிக மிக அவசியம் அவசரமும் கூட ,வெறும் வாய்ப்பந்தலும் வெட்டிப் பேச்சும் அறவே தவிர்க்கப்பட வேண்டும், அதிமுக ஆட்சியை பத்தாண்டுகளுக்குப் பிறகு மக்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர் ,ஆனால் பத்தாண்டுகள் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு திமுக ஆட்சி அமைத்துள்ளது. எனவே மக்களின் நம்பிக்கையை தக்க வைக்க ஆளும் கட்சியான திமுக நிச்சயம் போராடவேண்டும், இல்லையேல் மக்களின் வெறுப்புக்கு ஆரம்பத்திலேயே உள்ளாக நேரிடும் ,கொரோனா வியாதி பரவுகிறது என்று சில கடும் நடவடிக்கைகளை எடுப்பதில் தவறில்லை ஆனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் சீர் குலையாமல் காப்பதும் அரசாங்கத்தின் தலையாய கடமையாகும் ,ஒவ்வொரு குடும்பத்திற்குத் தேவையான பணம் மற்றும் பொருள் உதவியை அரசாங்கம் நிச்சயம் கொடுக்க வேண்டும் ,மேலும் மத்திய அரசிடம் மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க போதுமான நிதியை மத்திய அரசிடம் இருந்து வலியுறுத்தி கட்டாயம் பெறவேண்டும் ,மத்திய அரசிடம் சேவை வரி , ஜிஎஸ்டி வரி,வருமான வரி,சுங்கம் மற்றும் கலால் வரி , தவிர இதர வரிகளின் மூலம் பல லட்சம் கோடி ரூபாய் வருவாயாக சேர்ந்து இருக்கிறது ,அதைத் தமிழகத்திற்கு அளித்திட ஆளும் திமுக கட்சி நிச்சயம் வலியுறுத்த வேண்டும் அதையும் மீறி மத்திய அரசு தரவில்லை என்றால் அதைக் கேட்டு கட்டாயம் போராடவேண்டும் ,இல்லையேல் பல குடும்பங்கள் கொத்து கொத்தாய் சாகும் வருமானம் இல்லையேல் எவராலும் குடும்பம் நடத்தமுடியாது என்ற விரக்தியில் பலர்குடும்பத்தோடு தற்கொலைக்கு முயற்சி செய்து உயிரை விட்டு விடுவார்கள் ,எனவே இது மிகவும் கடினமான கால கட்டம் அரசாங்கம் பொறுப்புடன் செயல்படவில்லை என்றால் பின் விளைவுகள் மிக மிக மோசமாகும் ,வியாதி பரவுவதைத் தடுக்க உரிய வழிமுறைகளை செய்வதை விட்டு விட்டு பொது மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்து விட்டால் நாட்டில் எங்கு பார்த்தாலும் வன்முறையும் வெடிக்கும் அபாயம் ஏற்படும் உள்ளது .எனவே அரசாங்கத்தின் அணுகுமுறை மிக மிக சாதுர்யமாக இருப்பது மிகவும் அவசியம் . ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X