மீண்டும் முழு ஊரடங்கு நிலை ஏற்படாது: முதல்வர் ஸ்டாலின்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மீண்டும் முழு ஊரடங்கு நிலை ஏற்படாது: முதல்வர் ஸ்டாலின்

Added : மே 09, 2021 | கருத்துகள் (44)
Share
சென்னை: தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தும் நிலை ஏற்படாது என தொழில்துறையினர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், நாளை (மே 10) முதல் 24ம் தேதி வரையிலான 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட
TamilnaduCM, Stalin, TNLockdown, முதல்வர், ஸ்டாலின், முழு ஊரடங்கு, நிலை ஏற்படாது, தொழில்துறையினர்

சென்னை: தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தும் நிலை ஏற்படாது என தொழில்துறையினர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், நாளை (மே 10) முதல் 24ம் தேதி வரையிலான 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கிறது. இந்த ஊரடங்கு நாட்களில் வணிக நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஊரடங்கு சூழல் குறித்து தொழில் துறையினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஸ்டாலின் பேசுகையில், ‛தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தும் நிலை ஏற்படாது. முழு ஊரடங்கு அமல்படுத்தும் நிலை வந்தால் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்,' என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X