அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்திற்கு 5 சுகாதார செயலர்கள் வேண்டும் : சீமான் வலியுறுத்தல்

Updated : மே 09, 2021 | Added : மே 09, 2021 | கருத்துகள் (33)
Share
Advertisement
பேரிடர் கால நோய் தொற்றுத்தடுப்பு நடவடிக்கையாகக் கருத்தில் கொண்டு தமிழகத்தை ஐந்து மண்டலமாக பிரித்து 5 சுகாதார செயலாளர்களை நியமிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.நம்பிக்கைதமிழகத்தில் 12,500 ஆக்சிஜன் படுக்கைகள் கூடுதலாக அமைக்கத் தீவிர நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாகச் சுகாதாரத்துறை அமைச்சர்

பேரிடர் கால நோய் தொற்றுத்தடுப்பு நடவடிக்கையாகக் கருத்தில் கொண்டு தமிழகத்தை ஐந்து மண்டலமாக பிரித்து 5 சுகாதார செயலாளர்களை நியமிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.



latest tamil news




நம்பிக்கை



தமிழகத்தில் 12,500 ஆக்சிஜன் படுக்கைகள் கூடுதலாக அமைக்கத் தீவிர நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாகச் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்திருப்பது நம்பிக்கையைத் தருகிறது. கொரோனா நோயாளிகளுக்குச் சென்னையில் கிடைக்கும் வசதிகளும், வாய்ப்புகளும் தமிழகத்தின் கடைக்கோடிவரை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் தலையாயக் கடமையாகும்.

அதற்குப் பேரிடர் கால நோய்த்தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாகத் தமிழகத்தை ஐந்து சுகாதார மண்டலங்களாகப் பகுத்து, ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒவ்வொரு சுகாதாரச் செயலாளரை நியமிக்க வேண்டும். அதன்மூலம், நோய்த்தொற்றுதடுப்பு நடவடிக்கைகளும், நோயாளிகளுக்குரிய சிகிச்சை முறைகளும் தமிழகத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் பரவலாகக் கிடைக்கப் பெறவும், சுகாதார வசதிக் குறைபாடுகள் இல்லாத நிலையை அடையவும் உரிய ஏற்பாடுகளையும், வழிவகைகளையும் செய்யலாம்.


latest tamil news




மேலும், கொரோனா நோய்த்தொற்று சிகிச்சைக்கு ஆங்கில மருத்துவத்தோடு தமிழர்களின் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்துகிறேன். சமீபத்தில் தமிழகத்தின் மிக முக்கிய ஆளுமைகள் இம்மருத்துவ முறை மூலம் கொரானாவிலிருந்து மீண்டனர் என்று அறியும் பொழுது அதை அரசு கவனத்தில் எடுத்து தமிழகமுழுவதும் இருக்கும் அதைச் சித்த மருத்துவர்களையும் ஒருங்கிணைத்து உடனடியாக ஒருங்கிணைந்த சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
10-மே-202110:47:26 IST Report Abuse
Matt P எதுக்கு அஞ்சு செயலர். எல்லா மாவட்டத்திலயும் அதிகாரிகள் இருப்ப்பார்கள்ஏ . ஆட்சி தலைவர்கள் இருக்கிறார்கள். ஸ்டாலின் தான் இப்போ தான் வந்திருக்கார். கருவிலேயே அரசியலை கரைச்சு குடிச்சவர். அரசியலுக்கே அரசியலை கத்து கொடுப்பது மாதிரியல்லவா இருக்கிறது நீங்க பேசுறது.மக்கள் பணம்னா எல்லோருக்கு விளையஆட்டா போயிட்டுது.
Rate this:
Cancel
S Bala - London,யுனைடெட் கிங்டம்
10-மே-202110:14:06 IST Report Abuse
S Bala என்னங்க, கணக்குல கோட்டை விட்டுட்டீங்க.... மொத்தம் எட்டு திசைகளுக்கு எட்டு பேர் வேண்டுமல்லவா?
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
10-மே-202107:34:57 IST Report Abuse
சீனி தற்போது தேவை அறிக்கைவிடும் செயலர்கள் அல்ல, களப்பணியார்கள் மற்றும் மருத்துவர்கள். ஆட்டோ டிரைவர்களுக்கு, ஆக்சிஜன் முதலுதவிப்பயிற்சி அளித்து, அவர்களிடமே ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கினால், படுக்கை வசதி கிடைக்கும் வரை, அவர்களே கோவிட் நோயாளிகளை பத்திரமாக மருத்துவர் கிடைக்கும் வர வைத்திருப்பார்கள். சுகாதாரத்துறை இதற்க்கு மாவட்டம் தோறும் 100 ஆட்டோகளை பயிற்றுவிக்கலாம், மேலும் பிபி.யி கிட்கள், சிறிய ஆக்சிஜன் சிலிண்டர்களை இலவசமாக வழங்கலாம்.
Rate this:
S Bala - London,யுனைடெட் கிங்டம்
10-மே-202110:17:23 IST Report Abuse
S Balaஅருமையான யோசனை. ஆனால் பி.பி.இ. கிட்கள் இன்றைய வெப்பநிலையில் அணிய இயலாதவை. ஆட்டோக்களில் ஓட்டுனருக்கும் பயணிக்கும் இடையில் ஒரு கண்ணாடி தடுப்பு அமைப்பதுடன் ஆக்சிஜன் அளவை கட்டுப்படுத்தும் கருவியை ஓட்டுநர் இருக்கையினருகே வைக்கலாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X